Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Sunday, December 12, 2010

சிவயோகசாரம் 14

சிவயோகசாரம் 14

சிவயோகசாரம் 09-க்கு பிறகு 10,11,12,13 தொடர்களில் எனது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டேன்.
இப்பதிவினை 09-க்கு அடுத்தபடியான பதிவாக எடுத்துக்கொண்டு,  சிவயோகசாரம் நூலில் உள்ளதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆசன விதிகள்
அதாவது பத்திரம், வீரம், பதுமம், கோமுகம், குக்குடம் ஆகிய ‍ஐந்தும் ஞான சாதனத்துக்குரிய ஆசனமாகும்.
  இவற்றுள் பத்மாசனமாவது: இரண்டு தொடைகளில் இரண்டு பாதங்களையும்  செவ்வையாக வைத்து உட்காருதல் .
இது சகல பாவங்களையும் நாசம் செய்வதாகும்.
இதை மான்தோல், புலித்தோல், வெண்துகில், சித்திராசனம், தர்ப்ப‍ை இவைகளின் மேலிருந்து அனுபவிக்கலாம்.
( நான் தர்ப்பையால் ஆன தடுக்கின் மேல் அமர்ந்து செய்து வருகிறேன். )
இதில் இடை, வயிறு, கண்டம்( கழுத்து), தலை சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்ந்திருக்க வேண்டும்.
அன்றியும் வடமுகம் நோக்கித் தட்சிணாமூர்த்தமாய் எழுந்தருளியிருக்கும் ஆத்தும ஞானகுருவின் சன்னதிக்கு நேராய் உட்கார வேண்டியது. ( அல்லது தங்களுடைய இல்லத்தில் ( பூஜை அறையெனில் சிறப்பு) வடக்கு முகமாக அமரலாம். )
இதை சுவஸ்திகா ஆசனம் என்பர். கிருகஸ்தருக்குப் பதுமாசனமென்றும், சன்னியாசிகளுக்குச் சித்தாசனமென்றும் ஹடயோக தீபிகையில் நூலிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இரேசக பூரக லட்சணம்

  பிராணவாயுவின் அசைவு எதுவோ, அதுவே சித்தத்தின் அசைவு என்றும், மேலான புத்திமான்கள் பிராணனது சலனத்தை ஜெயித்தலில் முயல்கிறார்கள். ஆகையால், ராஜஸ, தாமஸ, குணங்களை நீக்கி, சாத்துவிக குணத்தோடு பிராணாயாமம் செய்ய வேண்டும். பிராணாயாமத்தில் வெளிவாயுவை உட்கொள்வது பூரகமாம். அவ்வாயுவை உள்நிறுத்துதல் கும்பகமாம். கும்பித்த வாயுவை வெளிப்படுத்துதல் இ‍ரேசகம் எனப்படும். இதுவே பிராணாயாம அங்கமாகிய இரேச பூரக லட்சணம்.
(இதன் விரிவு அடுத்த பதிவில்)

No comments:

Post a Comment