Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Thursday, October 7, 2010

சிவயோகசாரம் 06

சிவயோகசாரம் 05ன் தொடர்ச்சி..

இடகலையின் பலனாவது

          இடகலை நடக்குங்காலம் தாகம், ஜலவிருத்தி, தீர்மானம் செய்ய, வேலை செய்ய, நகை செய்ய நகையணிந்து கொள்ள, அன்னிய தேசத்திலிருந்து யாத்திரை போக, வீடு சத்திரம் கோவில் கட்ட, தருமஞ் செய்ய, சாமான் சேகரஞ் செய்ய, கிணறு, குளம் வெட்ட, கல்யாணம் செய்ய, வஸ்திரம் கட்ட, வைத்திய சாஸ்திரம் அப்பியாசம், மருந்து, கற்பங்கள் முதலியவை செய்ய, சினேகிதரைக் காண, வியாபாரஞ் செய்ய, தானியம் இருப்புச் செய்ய, வீட்டிற்குக் குடிபோக, விதை விதைக்க, சமாதானஞ் செய்ய, அன்னியபாஷை அப்பியாசஞ் செய்ய, உபதேசஞ் செய்ய, பலனைப்பற்றி யாத்திரை போக, யானை, குதிரை ஏறி வேட்டைக்குப் போக, எஜமானாக, ஆடல், பாடல் கற்க, ஒரு புதிய ஊருக்குப் போக, பந்துக்களை காணவுமாகிய நடவடிக்கைகள் செய்தால் பயன்படும்.
          இடைகலையானது சரிவர நடந்தால், தேகம் செளக்கியமாக இருக்கும். இதில் ஆகாசத்தின் அம்சமிருக்குமானால் முன்சொன்ன நடவடிக்கைகளுள் ஒன்றும் செய்யக்கூடாது. இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும், மேற்சொன்ன வேலைகளை இடைகலையில் நடத்த வேண்டுமென்பதாம்.
//.. ஆகாசத்தின் அம்சம் பற்றி வரும் பதிவுகளில் வரும். அடுத்தது பிங்கலையின் பலன் பற்றியது//

7 comments:

  1. இதை நம் கையில் கொண்டு வர, வாசி யோகம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்? வாசி யோகம் தனியே தமிழகத்தில், கற்பிக்கப் படுகிறதா?

    ReplyDelete
    Replies
    1. தேகலாயஞானபீடம்
      சர்தார் பட்டேல் சாலை ,
      ராஜ் பவன் கேட் .,
      கிண்டி சென்னை..
      உங்கள் சந்தேகங்கள் சரி செய்ய என்னை தொடர்பு கொள்ள கைபேசி என் :+919840833002

      Delete
    2. தேகலாயஞானபீடம்
      சர்தார் பட்டேல் சாலை ,
      ராஜ் பவன் கேட் .,
      கிண்டி சென்னை..
      உங்கள் சந்தேகங்கள் சரி செய்ய என்னை தொடர்பு கொள்ள கைபேசி என் :9840833002

      Delete
  2. @jagadeesh
    தங்கள் வருகைக்கு நன்றி!
    வாசியோகம் மிகப்பெரியது. இதில் கரைகண்டவர்கள் தற்காலத்தில் மிக அரிது. இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் சொல்லிக் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள். இது நான் கண்ட உண்மை.
    இடகலை பிங்கலை சுவாச ஓட்டத்தை கட்டுப்படுத்த நிச்சயம் வாசி யோகம் தெரிந்திருக்க வேண்டும். தமிழகத்தில் சித்த சமாஜம் என்ற அமைப்பு உள்ளது. இந்த அ‍மைப்பிற்கு காற்றுதான் கடவுள்.
    எனது சித்த மருத்துவ குருவும், தமிழ்நாடு சித்தவைத்தியர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்த, சென்னை சிந்தாதிரிப்பேட்டை
    தவத்திரு. ஏ.ஜி. கணபதி அடிகளாரின் வழிகாட்டுதலின் படி சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு பள்ளியில் வார இறுதி நாட்களில் சித்தசமாஜம் சார்பில் வாசியோகம் பயிற்சி அளித்தார்கள். நான் அதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளேன். மேலும் வடலூர் சத்தியஞானசபைக்கு பல வாசியோகிகள் ஜோதி தரிசனத்தின் பொருட்டு வருவார்கள். அவர்களிடம் நான் கலந்துரையாடுவதுண்டு. கரூரில் பெரியசாமி என்பவர் ஒருவர் வாசியோகத்தில் சில விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
    இந்த தொடரின் இடையிலோ அல்லது முடிவிலோ நானே சாதாரண மக்களுக்கு தேவையான சில எளிய பயற்சி முறையை கூறுகின்றேன்.
    வாசியோகம் பற்றி தமிழ் விக்கி மரபு தளத்தில் சிறிய விளக்கம் உள்ளது.
    இணைப்பு இதோ:
    http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    சித்த சமாஜம் தொடர்பான தளம். இணைப்பு:
    http://sivanandasiddhavidyacharities.org

    மேலும் வாசியோகம் பற்றி இணையத்தில் சர்ச் செய்து பாருங்கள்.
    உங்களின் வேட்கைக்கு, தக்க ஒரு குரு சித்தர்களின் ஆசியாலும், இறைவனின் அருளாலும் கிடைப்பார்.

    மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி கிடைக்கும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தேகலாயஞானபீடம்
    சர்தார் பட்டேல் சாலை ,
    ராஜ் பவன் கேட் .,
    கிண்டி சென்னை..
    உங்கள் சந்தேகங்கள் சரி செய்ய என்னை தொடர்பு கொள்ள கைபேசி என் :9840833002

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி!.

      "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு " என்பதற்கு இணங்க, எனக்கு ஏற்படும் சந்தேகங்களை அவசியம் ஏற்படும் போது, தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். சென்னை வரும் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் தங்களை நேரில் சந்திக்கின்றேன். நாம் சித்தர்கள் குறித்தும், அவர்களின் கலைகள் குறித்தும் பரஸ்பரம் உரையாடலாம்.

      Delete
    2. ஆத்திகரூம் நாத்திகரும் அறிவில் கானா
      சூத்திரமாம் மெய் ஞானம் தன்னை கான
      பாத்திரமாய் பலசெயலாய் பாரில் சொன்ன
      பூத்த மலர் வாசமதை புரிய செய்வோம்....

      என் மின்னஞ்சல் முகவரி..shanmukam68@gmail.com
      கைபேசி என் :9840833002


      தேகலாயஞானபீடம்
      சர்தார் பட்டேல் சாலை ,
      ராஜ் பவன் கேட் .,
      கிண்டி சென்னை..
      உங்கள் சந்தேகங்கள் சரி செய்ய என்னை தொடர்பு கொள்ள கைபேசி என் :9840833002

      Delete