சிவயோகசாரம் 15
(பொருள் (சிறு) விளக்கம் : -
சூரியநாடி - வலது நாசி
சந்திரநாடி - இடது நாசி
பூரித்தல் - மூச்சினை உள்ளிழுத்தல்.
கும்பித்தல் - உள்ளிழுத்த மூச்சினை உள்நிறுத்துதல்
( தம் கட்டுதல் என்று கிராமத்துப் பக்கம் சொல்வார்கள்)
இரேசித்தல் - உள்நிறுத்திய மூச்சினை மெதுவாக வெளியிடுதல்.
இந்த விளக்கத்தை நன்றாக படித்துக் கொண்டு பயிற்சியை ஆரம்பிக்கவும். நிதானமாக செய்யவும், மனம் ஒன்றி செய்யவும். அதிகாலை மற்றும் சாயந்தர வேளையில் செய்வது நன்று. ஒரு போதும் பதட்டம் கூடாது. காற்றோட்டமான இடத்தில் செய்தல் நலம். ஆரம்பத்தில் இதனை செய்யும் போது, பிறர் உங்களை கடுப்படித்தால் கண்டு கொள்ளாதீர்கள். சும்மா இருக்கும் சுகம் அறிய இந்த பயிற்சி முதலில் அவசியம் செய்து பழக வேண்டும். உடலில் குறிப்பிட்ட அளவு பிராணசக்தி உண்டாகும். மூளைப்பகுதியில் பிராணசக்தி அதிகமாக சுறுசுறுப்பை உண்டாக்கும். இப்பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம்(நோயாளிகள் தவிர்க்கவும்). மேலும் விளக்கம் தேவையெனில் உங்களுக்கு அருகிலுள்ள வாசியோகம் தெரிந்தவர்களை நேரில் சந்தித்து விளக்கம் பெறுதல் நலம்.)
சிவயோகசாரம் 14 ன் தொடர்ச்சி ...
சூரிய நாடியாகிய பிங்கலையால் பிராணனை இழுத்து மெள்ள மெள்ள வயிற்றை (நுரையீரலை)நிரப்பி, விதிப்படி பந்தபூர்வமாகிய கும்பகம் செய்து, மறுபடியும் சந்திர நாடியாகிய இடகலையால் இரேசிக்க வேண்டும்.
சந்திர நாடி, சூரியநாடிகளுள் எந்த நாடியால் பூரிக்கிறானோ, அதனாலேயே இரேசித்து நிரோதித்தலால், வேர்வை நடுக்கம் உண்டாகும். அதுவரையில் கும்பித்து எதனால் பூரகஞ் செய்யப்பட்டதோ, அதற்கு அன்னியமான நாடியால் மெள்ள இரேசிக்க வேண்டும். வேகமாய் இரேசித்தால் பலக்குறைவு உண்டாகும். எதனால் ரேசகம் செய்யப்பட்டதோ, அதனாலேயே பூரகம் செய்யலாம். இடகலையால் பிராணனை பூரித்துக் கும்பிக்கப்பட்ட பிராணனை, பிங்கலையால் இரேசிக்க வேண்டும். பிங்கலையால் வாயுவைப் பூரித்துக் கும்பித்த வாயுவை இடகலையால் இரேசிக்க வேண்டும். இவ்வண்ணம் சந்திரனால் பூரித்துக் கும்பித்து சூரியனால் இரேசிக்க வேண்டும். சூரியனால் பூரித்துக் கும்பித்து, சந்திரனால் இரேசிக்க வேண்டும். இவ்விதம் சூரிய சந்திர நாடிகளின் அப்பியாசத்தைத் தினமும் விஸ்தரிக்க வேண்டும். இதனால் நாடிகள் மூன்று மாசத்திற்குமேல் சுத்தமாகின்றன.
தொடரும்...
மிக அருமை...
ReplyDelete