Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts

Thursday, December 19, 2024

 

திருச்சிற்றம்பலம் 

 அருட்சிவஞான பீடத்தின் 17 ஆம் ஆண்டில் 

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா 

( மார்கழி ஆயில்யம்) 

&

ஸ்ரீஅகத்தியர் - ஸ்ரீலோபமுத்திரா

5 ஆம் ஆண்டு 

திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

நாள்: 19.12.2024



Sunday, August 13, 2023

நன்றி அருட்தோழி

அன்புடையீர், அருளுடையீர் வணக்கம்,

நான், கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக சிவ வழிபாட்டிலும், சித்தர்கள் வழிபாட்டிலும்  ஈடுபட்டு வருகின்றேன்.  

இருந்தாலும் போகர் மற்றும் கருவூரார் வழிபாட்டில் அதிகம் ஈடுபாடு இருந்தது.. அகத்தியர் வழிபாட்டில் ஈடுபட்டதில்லை... 

ஆனால், சிற்சில சோதனைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டு இறைவன் அருளால் எனக்கு நானே சில சுயபரிசோதனைகள் செய்து கொண்டதில்,   

ஸ்ரீஅகத்திய பெருமான் அருளாசியானது  என்னையும், அருட்சிவஞானபீடத்தை தேடி வந்துள்ளவர்களுக்கும்   

கடந்த ஆறு வருடங்களாக குறைவின்றி ஸ்ரீஅகத்திய பெருமானின் கருணை மழை பொழிகின்றது. 

வருடந்தோறும் ஸ்ரீஅகத்தியர் பெருமானுக்கு மார்கழி மாதத்தில்  திருக்கல்யாணம், 

மாதம் தோறும் பௌர்ணமி இரவில் ஸ்ரீஅகத்தியர் லோபமுத்ரா பல்லாக்கில் வலம் வருதல் 

போன்ற நிகழ்ச்சிகள் பெருமானின் கருணையினால் நமது அருட்சிவ ஞான பீடத்தில் நடந்தேறி வருகின்றது. 

எல்லாம் இறைவன் கருணை.. 

இதற்கு பல காரணிகளில் ஒரு  காரணியாக இருந்த 

அருட்தோழி-க்கு  நன்றிகள் பல . 

அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா

 அருட்சிவஞான பீடத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா  

அன்புடையீர், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இரயில்வே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சிவஞான பீடத்தின் 

16 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்

 ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின் 

6 ஆம் ஆண்டு துவக்க விழா 

சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்மத்தில் பிரவேசிக்கும் (நிகழும்) ஸ்ரீசோபகிருது ஆண்டு ஆவணி மாதம்  1 ம் நாள்  ( 18.08.2023) அன்று காலையில்  நடைபெற உள்ளது. 

அச்சமயம்  சித்தர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், கும்ப பூஜை, சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.  

இந்நிகழ்வில்,

நேரில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ள 

வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் வாழும் அருட்சிவஞான பீடத்தின் அன்பர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்யும் பொருட்டு  

9943117734 என்ற எண்ணிற்கு 

Telegram App வழியில் செய்தியாகவோ 

அல்லது 

Arutsiva Gnana Peedam

https://t.me/+Lnt1AJsufxM3NTY9

மேற்படி  Telegram App குழுவில் இணைந்து கொண்டு 

 தமிழ்  அல்லது ஆங்கிலத்தில்  தங்களது பெயர் பிறந்த நட்சத்திரம்,  ஊர், அலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர், நட்சத்திரம் மட்டும்  ஆகியவற்றை எங்களுக்கு 

செய்தியாக (Text Message) மட்டும் 

அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  

தங்களால் குறிப்பிடப்படும்  தகவல்கள் அனைத்தும்

தெய்வீக சித்தர்கள் வழிபாட்டு சேவையின் அடிப்படையில்  ( எவ்வித கட்டணமும் இன்றி) உலக மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் நல்லவை எல்லாம் பெற்று  வளமுடன் வாழ்ந்திடும் பொருட்டு 

 பௌர்ணமி நாட்கள், ஸ்ரீஅகத்தியர் திருக்கல்யாண விழா மற்றும் ஆண்டு விழா பிரார்த்தனைகளுக்கு 

மட்டும் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  


இங்ஙனம். 

அருட்சிவஞான பீட அன்பர்கள் 

அகில உலகம்.


Sunday, August 16, 2020

அருட்சிவஞான பீடத்தின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின் 3 ஆம் ஆண்டு துவக்க விழா

 அன்புடையீர்,
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இரயில்வே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சிவஞான பீடத்தின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின் 3 ஆம் ஆண்டு துவக்க விழா சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்மத்தில் பிரவேசிக்கும் (நிகழும்) சார்வரி ஆண்டு ஆவணி மாதம்  1 ம் நாள்  ( 17.08.2020) அன்று முற்பகலில் நடைபெற உள்ளது. அவ்வமயம்  உலக மக்களின் நன்மைக்கும், கொரானா நோய்த் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டும் சித்தர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.   தற்சமயம் நாட்டில் நிலவி வரும் கொரானா நோய்த் தொற்று தடுக்கும் பொருட்டு  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நோய் தடுப்பு  வழிகாட்டுதலின்  முக கவசம், கிருமிநாசினி பயன்படுத்துதல்  மற்றும்  சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் வாழும் அருட்சிவஞான பீடத்தின் அன்பர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்யும் பொருட்டு இந்த இணைப்பில் உள்ள படிவத்தில் தங்களது பெயர் பிறந்த நட்சத்திரம்,  ஊர், அலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர், நட்சத்திரம் மட்டும்  ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  தங்களால் குறிப்பிடப்படும்  தகவல்கள் பௌர்ணமி மற்றும் ஆண்டு விழா பிரார்த்தனைக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.   

இங்ஙனம்.
அருட்சிவஞான பீட அன்பர்கள்
அகில உலகம்

சொடுக்கவும் (Click)
https://forms.gle/J2Eny7aXGbQWMYJx7

Tuesday, November 8, 2011

கோரக்க சித்தர் குருபூஜை


 கோரக்க சித்தர் குருபூஜை - நாள் : 10.11.2011


ஒவ்வொரு தமிழ் ஐப்பசி மாதமும் (பெளர்ணமி) பரணி நட்சத்திரத்தில் மகான் கோரக்க சித்தரின் குருபூஜை விழா நடைபெறும் என்பது சித்தர்களை பூஜிப்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அது போன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மூகாசாபரூர் ( பரூர்பட்டி) ஊரிலுள்ள கோரக்கரின் ஜீவசமாதி ஆலயத்திலும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. (மேற்படி ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதாக அன்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்).
இந்த ஐப்பசி பெளர்ணமியன்று அருட்சிவஞான பீடத்தில் பெளர்ணமி பூஜை, பிரார்த்தனை, வேள்வி நடைபெற உள்ளதால், என்னால் எங்கும் செல்ல இயலவில்லை. இந்த பெளர்ணமி இரவில் கோரக்க சித்தரின் திருவடியைப் பிடித்துக்கொண்டு வழிபாடு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளேன். இறைச்சித்தமும், சித்த சித்தமும் அருள் புரிய வேண்டும். 
நான் சித்தர்கள் வழியில் நிற்பதால்,  கோரக்க சித்தரோடு அவ்வப்போது தொடர்பு கொண்டு அருளாசி பெற்று வருவது வழக்கம். இதற்கிடையில் , நேற்றைய தினம் ( 07.11.2011) வடலூரில் சத்திய ஞானசபைக்கு அருகில் உள்ள ஒரு புத்தகக்கடையில் சித்தர்கள் தொடர்பான புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கும் போது, பாட்டுச்சித்தர் ஓம் சக்தி நாராயண சாமி அவர்கள் எழுதிய ஸ்ரீகோரக்க சித்தர் கதையும் கருத்தும் ( கோரக்கர் அருளிய சந்திர ரேகை 200 மூலமும் உரையும்) என்ற நூல் கிடைத்தது. அதில் கோரக்க சித்தரின் வரலாறு மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
மேலும் சந்திர ரேகை 200 -க்கு தெளிவுரையும் மிகுந்த கருத்துச்செறிவுடன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  சித்தர்கள் வழிபாடு செய்பவர்கள்  அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டிய நூல் இது ஆகும்.  சித்தரின் குருபூஜையை ஒட்டி இந்த நூல்கிடைத்தது எனக்கு மிக மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நில்லாமல்,  இன்று 08.11.2011 ல் வடலூர் வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞானசபைக்கும்,  சத்திய தருமச்சாலைக்கும் கன்னியாகுமரி பால பிரஜாபதி அடிகளார் (அய்யாவழி) வருகை தந்திருந்தார்கள். அவர் வரும் சமயம் நான் கோரக்கரின் சந்திர ரேகை 200 நூலினை படித்துக்கொண்டிருந்தேன். உடனடியாக அடிகளாரிடம் சந்திர ரேகை 200 நூலில் தங்களின் கையொப்பம் இட்டு தரும்படி கேட்டு, அப்படியே அவரும் நூலில் கையெழுத்திட்டு கொடுத்து என்னைப்பற்றி விபரங்களை கேட்டு அறிந்து, ஆசியும் வழங்கினார். அடிகளாரிடம் ஆசி பெற்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. 
நிற்க, வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்க சித்தரின் குருபூ‍ஜை விழா மிகச்சிறப்பாக நடைபெறும் என்று லட்சக்கணக்கான அன்பர்கள் அவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் பாட்டுசித்தர் ஓம் சக்திநாராயணசாமி அவர்கள் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், எந்த ஒரு விஷயத்தை இந்த வலைத்தளத்தில் குறிப்பிடுவதாக இருந்தாலும் அதனைப்பற்றி இணையத்தில் search செய்துவிட்டுதான் பதிவெழுத ஆரம்பிப்பேன். கோரக்கர் சித்தர் பற்றி மேலும் சில தகவல்கள் இங்கும் குறிப்பிடலாம் என்று நான் நினைத்திருந்ததால், அதற்கு வேலையே இல்லாமல் எனக்கு முன்பே சில அன்பர்கள் வலையுலகத்தில் பதிவேற்றியுள்ளார்கள். அவர்களுக்கு இறைவனும், சித்தர்களும் சகல சித்திகளையும், சக்திகளையும், அருளையும் அளிப்பார்கள் என்று எண்ணலாம். வரும் பதிவுகளில் கொல்லி மலை பயணத்தின் போது, கோரக்கர் குகை சென்று வந்தது ( மிகசுவராசியமான, ஆன்மீகமான)  குறித்து பதிவேற்ற முயற்சிக்கின்றேன். இறைவனும் சித்தர்களும் அருள்புரியவேண்டும். 

நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த விபரங்களை, அந்ததந்த தளத்தின் முகவரியை கொடுத்துள்ளேன். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 
( முன்னரே இந்த பதிவுகளை படித்தவர்கள் தவிர்த்துவிடலாம். )

 1. கோரக்கர் பற்றிய சில தகவல்கள் 
http://18siddhar.blogspot.com/2011/11/blog-post.html
மேற்காணும் இனணப்பில் வடக்கு பொய்கை நல்லூர் கோரக்க சித்தரின் ஜீவசமாதி புகைப்படம் உள்ளது. 
அவசியம் பார்க்க வேண்டிய பதிவு.

2. சித்தர்கள் வரலாறு-10
http://vs-sk.blogspot.com/2011/07/10.html
இந்த தளம் சித்தர்கள் வரலாறு பற்றி கூறுகின்றது. இதில் கோரக்க சித்தரின் வரலாறும் உள்ளது.  

3. ராசி நக்ஷத்ரம் ஏற்ற சித்தர் திருத்தலங்கள்
http://bhogarsiddhar.blogspot.com/2011_01_01_archive.html
இந்த பதிவு நான் தேடியதில் ஆச்சர்யப்பட வைத்தது.  ராசி நட்சத்திரத்திற்கேற்ப வழிபடவேண்டி சித்தர் தலங்கள் குறித்து ஒரு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 
இதில் எனது பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி க்கு குறிப்பிட்டுள்ள ஸ்தலத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம். எந்த மதுரையை நோக்கியும், சுந்தரானந்த சித்தரை நோக்கியும், திருப்பரங்குன்றம் மச்சமுனி சித்தர் ஸ்தலத்தை நோக்கியும் நான் செல்கின்றேனோ அதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்லாடம்பட்டி பற்றி நான் இதுவரை அறியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன். 
நீங்களும் உங்களுக்கேற்ற ராசி நட்சத்திரத்தின்படி பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பிடப்பட்டுள்ளவை உங்களுக்கு சரியாக வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம். அனைத்து 

சித்தர் ஜீவசமாதிகளையும் தரிசித்து ஆனந்தம் கொள்ள ஏதுவாக இருங்கள். சித்தர்களின் கருணைப்பார்வை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். 

Monday, October 31, 2011

கசவனம்பட்டி சித்தர்


கசவனம்பட்டி சித்தர்
ஸ்ரீகசவன மெளன ஜோதி நிர்வாண சுவாமிகள் 

29வது குரு பூஜைவிழா நாள் : 31-10-2011


கடந்த ஒரு வாரத்திற்கு முன்,  நான் ( வள்ளலார் தெய்வ நிலைய) அலுவலகப்பணியில் இருந்தபோது அன்பர் ஒருவர் நன்கொடை அளிக்கும் பொருட்டு அவரது ஊர் முகவரியை குறிப்பிட்டிருந்தார். முகவரியில் பழங்காநத்தம், மதுரை என்றிருந்தது.  மதுரை என்ற பெயரைக்கேட்டாலே எனக்கு இனம்புரியாத ஒரு ஆனந்தமான  உணர்வு  ஏற்படும். ஏனெனில், அந்த ஊரின் ஆன்மீக சக்தியை நான் மிக நன்கு உணர்ந்திருப்பவன். நன்கொடை கொடுக்க வந்த அன்பரிடம் மேலும் ஆன்மீக விஷயமாக பேச்சு கொடுத்து பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு சித்தர்கள் ஜீவசமாதி கோயில்களை பற்றி சென்றது.  பேச்சு இடையில், திண்டுக்கல் பக்கத்தில் உள்ள கசவனம்பட்டி சித்தர் கோயிலுக்கு போயிருக்கின்றீர்களா? என்று அந்த அன்பர் கேட்டார். இல்லைங்க என்று நான் பதில் கூறினேன். 
மேலும் அவரிடம் அந்த சித்தர் பற்றி கேட்டதற்கு, அவர் எனக்கு முழுவிபரம் தெரியாது எனது நண்பர் அடிக்கடி சென்று வருவார் என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார். அவர் சென்றதிலிருந்து எனக்கு ஒரே தவிப்பு. கசவனம்பட்டி சித்தர்னா யார் அவர்? அவர் ‍எப்படி இருப்பார்? அவரின் வாழ்க்கை வரலாறு என்ன ? என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. சரி நெட்டில் தேடிப் பார்ப்போம் என்று நினைத்து, தேடாமலேயே விட்டுவிட்டேன்.  மூன்று நாட்கள் கழிந்திருக்கும். பணி நிமித்தமாக எனது அலுவலக நிர்வாக அதிகாரியின் அறைக்கு சென்றேன். அங்கு நிர்வாக அதிகாரியுடன் விழுப்புரம் & கடலூர் மாவட்ட ஆலய நிலங்களுக்கான தனித்துணை ஆட்சியர்( ஓய்வு) அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.   மின்வெட்டு காரணமாக,  தனித்துணை ஆட்சியர் அவர்கள் கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு விசிறிக்கொண்டிருந்தார்கள். விசிறிக்கொண்டிருந்த பேப்பரில் ஒரு உருவம் அசைந்தபடி இருந்தது. என் மனதில் ஒரு உருத்தல்.  சார் அந்த பேப்பரை கொஞ்சம் கொடுங்கள் என்றேன். அவர் பண்பாளர். உடன் கொடுத்துவிட்டார். வாங்கி அந்த உருவத்தை பார்த்தேன். மறு பக்கம் பார்த்தால் ஸ்ரீகசவன மெளன ஜோதி நிர்வாண சுவாமிகள் 29வது குரு பூஜைவிழா என்றிருந்தது.  சற்று அதிர்ந்து விட்டேன். எந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து மூன்று நாட்களாக தவித்திருந்தேனோ,  அந்த சித்தரின் 29வது ஆண்டு குருபூசைப் பத்திரிக்கையின் கிழிந்த ஒரு பகுதிதான்  அது என்பதை அறிந்து எனக்கு தாங்கொணா மகிழ்ச்சி. பத்திரிக்கையின் இரண்டு பக்கங்கள் தான் இருந்தது. மீதி பக்கங்கள் இல்லை.   தனித்துணை ஆட்சியரிடம் ஐயா இந்த பத்திரிக்கை ஏது என்று வினவினேன். இங்கதாம்பா கிடந்தது என்றார். மீதி பத்திரிக்கை எங்கே என்று கேட்டேன். எனக்கு தெரியாது என்று பதிலளித்தார். உடன் கிழிந்த பத்திரிக்கையை புரட்டி பார்த்தபோது கடைசியில் சித்தர்கோயிலின் வெப்சைட் முகவரி அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த முகவரிக்கு இணையத்தில் சென்று பார்த்தபோது குருபூஜை பற்றிய  முழுவிபரம் தெரிந்தது. சித்தரின் ஜீவசமாதி இருப்பிடம் பற்றிய  விபரமும் தெரிந்தது. 



இந்த நிகழ்வின் மூலம் கசவனம்பட்டி சித்தரின் அருளாற்றலை எளிதில் என்னால் உணர முடிந்தது. யாரோ ஒரு அன்பரின் மூலம் கசவனம்பட்டி சித்தர் என்று கேள்விப்பட்டு, அவரைப்பற்றிய  விபரத்தை ஒரு கிழிந்த பத்திரிக்கையின் மூலம் தனித்துணை ஆட்சியரின் கையில் அசைந்ததின் மூலம் , நீ என்னைத் தேடவேண்டாம் நான் இங்கிருக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லி, அருளிச் செய்த விதம் என்னை  வியப்பில்  ஆழ்த்தியது. 
எவர் ஒருவர் சித்தர்களை பற்றி நினைக்கின்றார்களோ அவர்களின் எண்ணம் செயல்  அனைத்தும் சித்தர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிரதிபலிப்பாக பல அருள் நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும். இது எனது பல்வேறு அனுபவத்தில் உண்மையாக நான் கண்டது. 
மறுமுறை நான் மதுரை செல்லும் போது அப்படியே திண்டுக்கல் சென்று கசவனம்பட்டி சித்தரின் ஜீவசமாதிக்கு சென்று வரவேண்டும் என்று எண்ணியுள்ளேன். அவரின் அருளாசி கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புவோமாக. 


ஏன் இந்த சித்தர் நிர்வாணமாக இருந்தார்?. நிர்வாணத்தின் தாத்பரியம் என்ன? இந்து மதத்தில் நிர்வாணம் பற்றிய குறிப்புகள் உள்ளதா? இந்தியாவில் உள்ள பிற மதத்தில் நிர்வாணம் பற்றிய குறிப்பு என்ன? இந்து மதம் நிர்வாணத்தை ஒப்புக்கொள்கின்றதா? என்பதை பிற்பாடு சமயம் வரும்போது பார்ப்போம். 


கசவனம்பட்டி சித்தர் திருக்கோயில் 
இணைய தள முகவரி www.kasavanam-siddhar.org

( இந்த பதிவினை நேற்றே (30.10.11 அன்று) பதிவிட இருமுறை முயற்சித்தும் சில தடைகளால் மு‍டியவில்லை. தற்போதுதான் முடிந்தது) 

Thursday, August 18, 2011

அருட்சிவஞான பீடம்


அருட்சிவஞான பீடம்

நான்காம் ஆண்டு துவக்கம்.

நிகழும் கர ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் அருட்சிவஞானபீடத்தின் நான்காம் ஆண்டு துவக்க நாளாகும்.
கடந்த சர்வதாரி ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் ( 17.08.2008ல்) உலகிற்கெல்லாம் ஒளி அளிக்கும் சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாளன்று இப்பீடம் இறையருளால் துவக்கப்பட்டது. இப்பீடத்தால் மிகப்பெரிய அளவில் ஆன்மீகப் பணிகள் நடைபெறாவிட்டாலும் என் அளவில் சிற்சில ஞானப்பணிகள் நடைபெற்றுள்ளது.
அதில் ஒன்று மிகப்பழமையான சிவன் கோயிலுக்கு நந்தி எம்பெருமான் கற்சிலா விக்ரகம் (அவன் அருளாலே அவன் தாள் பணிந்து) அமைத்துக் கொடுத்தது. அந்தக் கோயிலின் சிவலிங்க வடிவம்தான். இந்த வலைப்பூவின் லோகோவில் அமைந்துள்ளது ஆகும். இத்திருக்கோயிலுக்கு நந்தி‍யெம்பெருமான் சிலா விக்ரகம் வந்த விபரம் பின்னர் ஒரு பதிவில் தெரிவிக்கின்றேன்.
இந்த அருட்சிவஞான பீடம் செயல்பாட்டின் பொருட்டு நான் பூசை செய்து வரும் எனது ஊர் சித்திவிநாயகர் திருக்கோயிலின் நிர்வாகத்தார் வசம் சில அனுமதி மற்றும் நிபந்தனை உறுதிமொழி குறித்தான விபரங்களை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இக்கடிதத்தின் PDF நகல் இதோ கீழே இணைத்துள்ளேன். சுட்டி படிக்கவும்.


இக்கடிதத்திற்கு ஊர் மக்களிடமிருந்தும், கோவில் நிர்வாகம் வசமிருந்தும் அனுமதி அப்பொழுது கிடைத்ததின் பொருட்டு பீடமும் ‍செயல்பட்டு வருகின்றது.
இப்பீடத்தின் அருட்செயல்பாடுகள் குறித்தான விபரங்கள் பின்னிட்டு நேரம் இருக்கும்போது பகிர்கின்றேன்.