Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Wednesday, October 20, 2010

சிவயோகசாரம் 09

நாடிகளின் நிலை
  முதல் ஆதாரமாகிய மூன்று நாடிகளைப்பற்றியும் விவரமாகச் சொல்லுவோம். அதாவது மனிதர்களுக்கு எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை இருபத்து நான்கு. இவை எப்போதும் உறங்கிகொண்டிருக்கின்றன. இவைகளைக் குண்டலி சக்தி என்று ஆதிநாதர் அருளிச் செய்திருக்கின்றார்.
  குண்டலி சக்தி மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது, பத்து நாடிகள் மேலாகவும், பத்து நாடிகள் கீழாகவும், இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும், இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன. இந்தக் குண்டலி சக்தியானது, பாம்பைப் போலச் சுற்றிக்கொண்டு சுவாதிஷ்டானத்திற்கு மேலாகவும், மணிபூரகத்திற்குக் கீழாகவும் இருக்கின்றது. இந்த இருபத்துநான்கு நாடிகளுள் பத்து நாடிகளை முக்கியமாக எடுத்திருக்கின்றனர்.
இந்த பத்து நாடிகளில் முன் சொல்லிய மூன்று நாடிகளை முக்கியமாக எடுத்திருக்கின்றபடியால், அதில் இடகலையானது தேகத்தின் இடது பாகத்திலும், பிங்கலையானது தேகத்தின் வலது பக்கத்திலும், சுழுமுனையானது தேகத்தின் மத்தியிலும் இருக்கின்றன.
இக்குண்டலி சத்தியைப் பற்றி விவரமாக பின்னே சொல்லப்படவிருக்கின்றது.
//..அடுத்த சிவயோகசாரம் 10 பதிவில் சில அனுபவ பூர்வமான விஷயங்களை பார்ப்போம். ..//

3 comments:

  1. அன்பரே! தங்கள் குரு யார் என்று தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  2. @ஜெகதீஷ்
    //..அன்பரே! தங்கள் குரு யார் என்று தெரிந்து கொள்ளலாமா?..//

    என்னுடைய குரு யார் என்பதற்கு "கணபதி நாடி என்னும் ஜீவநாடி"யில் வந்த பதில் இது.

    " இறை முனி ரிஷிகளே உமக்கு குருவாய் இருந்து அனைத்தையும் செய்வர்"

    (இந்த ஜீவநாடி சுவடி திருச்சி திருவானைக்காவில் உள்ளது)

    மேலும் எனது குருவினைப்பற்றி விரிவாக பதிவுகளில் வெளிவரும் என பணிவுடன் ‍தெரிவிக்கின்றேன்.

    ReplyDelete
  3. Ganapathi nadi address kodungal boss

    ReplyDelete