சிவயோகசாரம் 06(07)ன் தொடர்ச்சி..
பிங்கலையின் பலனாவது
வலநாசியில் உண்டாகின்ற பிங்கலை வாயுவில் அதாவது சூரியநாடிக் காலத்தில் கஷ்டமான வேலை எதுவும் அப்பியசிக்க, எவ்வித கொடூரமான செய்கையும் செய்ய, ( அய்யோ! நமக்கு வேண்டாம் கொடூர செய்கை) போஜனம் செய்ய, மலம் கழிக்க, போகம் செய்ய, கடல் யாத்திரை போக, சண்டை செய்ய, படை எடுக்க, கஷ்டமான சாஸ்திரம் கற்க, குதிரை முதலாகிய நாற்கால் ஜீவன்களை வாங்க விற்க, மட்டமான மலை ஏற, குதிரை ஏற்றம், மல்யுத்தம் முதலாகிய பழக்கம் செய்ய, ஆறு குளம் கடல் முதலாகிய இடங்களில் நீந்த, உலோகங்களைக் குறித்த சாஸ்திரங்களைப் படிக்க, பாடம் எழுத, பணம் வாங்க கொடுக்க, எஜமானத்துவமான வேலை பார்க்க, அரசனைக் காண, இரண வைத்தியத்திற்கு மருந்து செய்ய, கடினமான ஆகாரம் ஜீரணிக்க இவை முதலாகிய செய்கைகள் செய்ய வேண்டு மென்பதாம்.
சுழுமுனையின் பலனாவது
சுழுமுனை நாடி, இரண்டு நாசியிலும் வரும் சுவாசம்.
அதை அதன் நடவடிக்கைக் காலத்திலேதான் அறியலாம்.
ஒரு கணத்தில் இட நாசியிலும், ஒரு கணத்தில் வலநாசியிலும் வரும் வாயுவானது இரண்டு நாசியிலும் வரும்போது சுழுமுனையாம்.
இந்த சுழுமுனை நடக்கும் காலத்தில் உலக நடவடிக்கைகளை நிறுத்தி விடவேண்டும். தவறி நடந்தால் அபஜெயமாம்.
எண்ணத்துக்கு விரோதமாய் நடக்கும் இந்த வாயுவின் காலத்திலே ஆத்துமத் தியானமும், பூசையும் செய்யலாம்.
இந்த வாயு நடக்குங் காலத்திலேதான் சுவாச பந்தனம் செய்யக்கூடும்.
இந்தச் சுவாசம் கட்டுவதனால் மனத்திற்கும் தேகத்திற்கும் இன்பம் உண்டாகின்றது.
//..... நாம் இதுவரை கண்ட மூன்று நாடிகளின் நிலைபற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்......//
//..... நாம் இதுவரை கண்ட மூன்று நாடிகளின் நிலைபற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்......//
ReplyDeleteபார்க்கலாம்...