சிவயோகசாரம் 04ன் தொடர்ச்சி..
பிராணவாயுவின் நிலை
மாணாக்கன் ஆரம்பத்தில் கவனிக்க வேண்டிய விதிகள் யாதெனில், அவை சூரியன் சந்திரன் அக்கினி என்னும் மூன்று நாடிகளின் நடைகளெனப்படும்.
மூன்று கலையின் சுவாசத்தினாலுண்டாகும் சத்தத்தைக் கண்டறிய வேண்டும்.
அச்சப்தத்துக்கு "அஜபா" என்பது பெயராம் அந்தச் சப்தத்தைக் கண்டுபிடிக்கச் சில விதிகள் கூறப்பட்டிருக்கின்றன. அவையாவன : வாயுக்கள் மூன்று: அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பன. இடகலை என்பது இடது நாசியிலும், பிங்கலை என்பது வலது நாசியிலும், சுழுமுனை என்பது இரண்டு நாசியிலும் வரவும் போகவுமிருக்கிற சுவாசம். இதற்கு அஜபா என்பது பெயராம். இடைகலை என்பது சந்திரனும், பிங்கலை என்பது சூரியனும், சுழுமுனை என்பது அக்கினியுமாம்.
அன்றியும், இடகலையானது, சுக்கிலபட்சமாகிற அமாவாசையில் பிரதமை முதல் மூன்று நாளைக்குக் காலையில் தொடர்ச்சியாய் வரவேண்டும்.
சதுர்த்தி முதல் மூன்று நாளைக்குப் பிங்கலை நடக்க வேண்டும்.
இதே மாதிரி சுக்கிலபட்சத்தில் சந்திரகலை வராவிடில் அவனுக்குத் தேகம் அசெளகரியப்பட்டுக் கவலை மேலிடுமென்றறிக. அதைச் சரிப்படுத்த வேண்டிய விஷயத்தைப்பற்றி பின்வரும் வாக்கியத்தில் காண்க.
கிருஷ்ணபட்சம், அதாவது பெளர்ணமி பிரதமை முதல் மூன்று நாட்களும் பிங்கலை நடக்க வேண்டும்.
பின் மூன்று நாட்களுக்கும் இடகலை நடக்க வேண்டும்.
இத்தன்மையை இரண்டு கலைகளும் மும்மூன்று நாளைக் கொருமுறை மாறி மாறி நடக்க வேண்டும்.
இதை மாணாக்கன் குறிப்பாகத் தினம் தினம் கவனிக்க வேண்டும்.
சுழுமுனை கூடுவது கஷ்டமானதால், அதை சாக்கிரதையாய் அப்பியசித்துப் பழகல் வேண்டும்.
மாணாக்கனுக்கு முக்கிய வேலை, இடகலையும், பிங்கலையும் திதிக்கு தவறி நடந்தால், அதை மாற்ற வேண்டிய விஷயத்தைப் பற்றிக் குரு மூலமாக கேட்டுக்கொள்ள வேண்டும்.

///இடகலை, பிங்கலைகளை மாற்றும் முறைபற்றி பின்னர் நான் கூறுகின்றேன்.. //
அடுத்ததாக இடகலையின் பலனைப் பற்றி சிவயோக சாரத்தில் காணப்படுவதை பார்ப்போம்.
மிக அருமை.
ReplyDelete@Jagadeesh
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!.