Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Saturday, December 25, 2010

சிவயோகசாரம் 15

சிவயோகசாரம் 15
(பொருள் (சிறு)  விளக்கம் : -
       சூரியநாடி - வலது நாசி
       சந்திரநாடி - இடது நாசி
       
பூரித்தல் - மூச்சினை உள்ளிழுத்தல்.
கும்பித்தல்  - உள்ளிழுத்த மூச்சினை உள்நிறுத்துதல்
              ( தம் கட்டுதல் என்று கிராமத்துப் பக்கம் சொல்வார்கள்)
 இரேசித்தல் - உள்நிறுத்திய மூச்சினை மெதுவாக வெளியிடுதல்
இந்த விளக்கத்தை நன்றாக படித்துக் கொண்டு பயிற்சியை ஆரம்பிக்கவும். நிதானமாக செய்யவும், மனம் ஒன்றி செய்யவும். அதிகாலை மற்றும் சாயந்தர வேளையில் செய்வது நன்று. ஒரு போதும் பதட்டம் கூடாது. காற்றோட்டமான இடத்தில் செய்தல் நலம். ஆரம்பத்தில் இதனை செய்யும் போது, பிறர் உங்களை  கடுப்படித்தால் கண்டு கொள்ளாதீர்கள். சும்மா இருக்கும் சுகம் அறிய இந்த பயிற்சி முதலில் அவசியம் செய்து பழக வேண்டும். உடலில் குறிப்பிட்ட அளவு பிராணசக்தி உண்டாகும். மூளைப்பகுதியில் பிராணசக்தி அதிகமாக சுறுசுறுப்பை உண்டாக்கும். இப்பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம்(நோயாளிகள் தவிர்க்கவும்).  மேலும் விளக்கம் தேவையெனில் உங்களுக்கு அருகிலுள்ள வாசியோகம் தெரிந்தவர்களை நேரில் சந்தித்து விளக்கம் பெறுதல் நலம்.)

சிவயோகசாரம் 14 ன் தொடர்ச்சி ...
சூரிய நாடியாகிய பிங்கலையால் பிராணனை இழுத்து மெள்ள மெள்ள வயிற்றை (நுரையீரலை)நிரப்பி, விதிப்படி பந்தபூர்வமாகிய கும்பகம் செய்து, மறுபடியும் சந்திர நாடியாகிய இடகலையால் இரேசிக்க வேண்டும்.
சந்திர நாடி, சூரியநாடிகளுள் எந்த நாடியால் பூரிக்கிறானோ, அதனாலேயே இரேசித்து நிரோதித்தலால், வேர்வை நடுக்கம் உண்டாகும். அதுவரையில் கும்பித்து எதனால் பூரகஞ் செய்யப்பட்டதோ, அதற்கு அன்னியமான நாடியால் மெள்ள இரேசிக்க வேண்டும். வேகமாய் இரேசித்தால் பலக்குறைவு உண்டாகும். எதனால் ரேசகம் செய்யப்பட்டதோ, அதனாலேயே பூரகம் செய்யலாம். இடகலையால் பிராணனை பூரித்துக் கும்பிக்கப்பட்ட பிராணனை, பிங்கலையால் இரேசிக்க வேண்டும். பிங்கலையால் வாயுவைப் பூரித்துக் கும்பித்த வாயுவை இடகலையால் இரேசிக்க வேண்டும். இவ்வண்ணம் சந்திரனால் பூரித்துக் கும்பித்து சூரியனால் இரேசிக்க வேண்டும். சூரியனால் பூரித்துக் கும்பித்து, சந்திரனால் இரேசிக்க வேண்டும். இவ்விதம் சூரிய சந்திர நாடிகளின் அப்பியாசத்தைத் தினமும் விஸ்தரிக்க வேண்டும். இதனால் நாடிகள் மூன்று மாசத்திற்குமேல் சுத்தமாகின்றன.

தொடரும்...

Sunday, December 12, 2010

சிவயோகசாரம் 14

சிவயோகசாரம் 14

சிவயோகசாரம் 09-க்கு பிறகு 10,11,12,13 தொடர்களில் எனது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டேன்.
இப்பதிவினை 09-க்கு அடுத்தபடியான பதிவாக எடுத்துக்கொண்டு,  சிவயோகசாரம் நூலில் உள்ளதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆசன விதிகள்
அதாவது பத்திரம், வீரம், பதுமம், கோமுகம், குக்குடம் ஆகிய ‍ஐந்தும் ஞான சாதனத்துக்குரிய ஆசனமாகும்.
  இவற்றுள் பத்மாசனமாவது: இரண்டு தொடைகளில் இரண்டு பாதங்களையும்  செவ்வையாக வைத்து உட்காருதல் .
இது சகல பாவங்களையும் நாசம் செய்வதாகும்.
இதை மான்தோல், புலித்தோல், வெண்துகில், சித்திராசனம், தர்ப்ப‍ை இவைகளின் மேலிருந்து அனுபவிக்கலாம்.
( நான் தர்ப்பையால் ஆன தடுக்கின் மேல் அமர்ந்து செய்து வருகிறேன். )
இதில் இடை, வயிறு, கண்டம்( கழுத்து), தலை சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்ந்திருக்க வேண்டும்.
அன்றியும் வடமுகம் நோக்கித் தட்சிணாமூர்த்தமாய் எழுந்தருளியிருக்கும் ஆத்தும ஞானகுருவின் சன்னதிக்கு நேராய் உட்கார வேண்டியது. ( அல்லது தங்களுடைய இல்லத்தில் ( பூஜை அறையெனில் சிறப்பு) வடக்கு முகமாக அமரலாம். )
இதை சுவஸ்திகா ஆசனம் என்பர். கிருகஸ்தருக்குப் பதுமாசனமென்றும், சன்னியாசிகளுக்குச் சித்தாசனமென்றும் ஹடயோக தீபிகையில் நூலிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இரேசக பூரக லட்சணம்

  பிராணவாயுவின் அசைவு எதுவோ, அதுவே சித்தத்தின் அசைவு என்றும், மேலான புத்திமான்கள் பிராணனது சலனத்தை ஜெயித்தலில் முயல்கிறார்கள். ஆகையால், ராஜஸ, தாமஸ, குணங்களை நீக்கி, சாத்துவிக குணத்தோடு பிராணாயாமம் செய்ய வேண்டும். பிராணாயாமத்தில் வெளிவாயுவை உட்கொள்வது பூரகமாம். அவ்வாயுவை உள்நிறுத்துதல் கும்பகமாம். கும்பித்த வாயுவை வெளிப்படுத்துதல் இ‍ரேசகம் எனப்படும். இதுவே பிராணாயாம அங்கமாகிய இரேச பூரக லட்சணம்.
(இதன் விரிவு அடுத்த பதிவில்)

Thursday, December 2, 2010

ஆனந்த சித்தன் ஸ்ரீ ஐயப்பன் 108 சரணக்கோவை

குறிப்பு : இது ஒரு மீள் பதிவு

ஓம் சாமியே சரணம் ஐயப்பா 

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யும் பொருட்டு கார்த்திகை மாதத்தில் பலரும் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம்.
 நானும் எனது 21வது வயதிலிருந்து மாலை அணிந்து விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று வருகிறேன். இவ்வருடம் எனக்கு 18 வது வருடம்.
  நிற்க, என்னுடன் மாலை அணிந்த ஒரு ஐயப்ப பக்தர் ஐயப்ப சரணக்கோவை நூல்வடிவில் இருந்தால் தரும்படி கேட்டுக்கொண்டார். எனக்கு சரணங்கள் மனப்பாடம்தானே தவிர கைவசம் நூல்வடிவில் இல்லை. இணையத்தில் தேடிப்பார்த்தால், இந்த சரணக்கோவை வெவ்வேரு வடிவத்தில், வரிசைமுறை மாறி இருந்தது. கடைகளிலும் நான் எதிர்பார்ப்பது போல் கிடைக்கவில்லை. நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்த சிதைந்த பழைய புத்தகத்தில் இருந்து, இந்த 108 ஐயப்பன் சரணக்கோவையை தட்டச்சு செய்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். இச்சரணக்கோவை அகர வரிசைப்படி உள்ளது. ஐயப்ப பக்தர்கள் மனப்பாடம் செய்ய எளிதாகவும் இருக்கும். இச்சரணக்கோவையை யார் வேண்டுமானாலும் பிரதி எடுத்துக்கொள்ளலாம்.
 
------------------------------

ஆனந்த சித்தன்
ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் சரணக்கோவை

ஓம்
கன்னிமூல கணபதியே
சரணம் ஐயப்பா
1
ஓம்
அச்சன் கோவில் அரசே
சரணம் ஐயப்பா
2
ஓம்
அதிர் வேட்டுப் பிரியனே
சரணம் ஐயப்பா
3
ஓம்
அப்பாச்சி மேடே
சரணம் ஐயப்பா
4
ஓம்
அரிகர சுதனே
சரணம் ஐயப்பா
5
ஓம்
அலங்காரப் பிரியனே
சரணம் ஐயப்பா
6
ஓம்
அழுதா நதியே
சரணம் ஐயப்பா
7
ஓம்
அழுதை மலை ஏற்றமே
சரணம் ஐயப்பா
8
ஓம்
அன்னதானப் பிரபுவே
சரணம் ஐயப்பா
9
ஓம்
ஆபத்தில் காப்போனே
சரணம் ஐயப்பா
10
ஓம்
ஆதிசக்தி மகனே
சரணம் ஐயப்பா
11
ஓம்
ஆரியங்காவு ஐயாவே
சரணம் ஐயப்பா
12
ஓம்
ஆறுமுகன் சோதரனே
சரணம் ஐயப்பா
13
ஓம்
இஞ்சிப்பாறைக் கோட்டையே
சரணம் ஐயப்பா
14
ஓம்
இச்சைத் தவிர்ப்பவனே
சரணம் ஐயப்பா
15
ஓம்
இருமுடிப் பிரியனே
சரணம் ஐயப்பா
16
ஓம்
இருளகற்றிய ஜோதியே
சரணம் ஐயப்பா
17
ஓம்
இன் தமிழ்ச் சுவையே
சரணம் ஐயப்பா
18
ஓம்
ஈசனின் திருமகனே
சரணம் ஐயப்பா
19
ஓம்
ஈடில்லாத் தெய்வமே
சரணம் ஐயப்பா
20
ஓம்
உடும்பாறைக் கோட்டையே
சரணம் ஐயப்பா
21
ஓம்
உண்மைப் பரம்பொருளே
சரணம் ஐயப்பா
22
ஓம்
உத்தமனே சத்தியனே
சரணம் ஐயப்பா
23
ஓம்
உத்திரத்தில் உதித்தோனே
சரணம் ஐயப்பா
24
ஓம்
உரல்குழித் தீர்த்தமே
சரணம் ஐயப்பா
25
ஓம்
உலகாளும் காவலனே
சரணம் ஐயப்பா
26
ஓம்
ஊமைக்கு அருள் புரிந்தவனே
சரணம் ஐயப்பா
27
ஓம்
ஊழ்வினை அழிப்பவனே
சரணம் ஐயப்பா
28
ஓம்
எங்கள் குல தெய்வமே
சரணம் ஐயப்பா
29
ஓம்
எருமேலி சாஸ்தாவே
சரணம் ஐயப்பா
30
ஓம்
எருமேலி வாசனே
சரணம் ஐயப்பா
31
ஓம்
ஏகாந்த மூர்த்தியே
சரணம் ஐயப்பா
32
ஓம்
ஏழைப் பங்காளனே
சரணம் ஐயப்பா
33
ஓம்
ஐங்கரன் தம்பியே
சரணம் ஐயப்பா
34
ஓம்
ஐந்து மலைக் கதிபதியே
சரணம் ஐயப்பா
35
ஓம்
ஐயப்பா தெய்வமே
சரணம் ஐயப்பா
36
ஓம்
ஐயமெல்லாம் தீர்ப்பவனே
சரணம் ஐயப்பா
37
ஓம்
ஒப்பில்லாத் திருமணியே
சரணம் ஐயப்பா
38
ஓம்
ஒளிதரும் திருவிளக்கே
சரணம் ஐயப்பா
39
ஓம்
ஓங்காரப் பரம்பொருளே
சரணம் ஐயப்பா
40
ஓம்
ஓதும் மறை பொருளே
சரணம் ஐயப்பா
41
ஓம்
கடுத்த சாமியே
சரணம் ஐயப்பா
42
ஓம்
கண்கண்ட தெய்வமே
சரணம் ஐயப்பா
43
ஓம்
கரிமலை ஏற்றமே
சரணம் ஐயப்பா
44
ஓம்
கரிமலை இறக்கமே
சரணம் ஐயப்பா
45
ஓம்
கரியிலந்தோடே
சரணம் ஐயப்பா
46
ஓம்
கருப்பண்ணசாமியே
சரணம் ஐயப்பா
47
ஓம்
கலியுக வரதனே
சரணம் ஐயப்பா
48
ஓம்
கல்லிடுங் குன்றே
சரணம் ஐயப்பா
49
ஓம்
கற்பூரப் பிரியனே
சரணம் ஐயப்பா
50
ஓம்
கற்பூர ஜோதியே
சரணம் ஐயப்பா
51
ஓம்
காந்தமலை ஜோதியே
சரணம் ஐயப்பா
52
ஓம்
காளை கட்டி நிலையமே
சரணம் ஐயப்பா
53
ஓம்
குருதட்சிணை அளித்தவனே
சரணம் ஐயப்பா
54
ஓம்
குருமகனின் குறை தீர்த்தவனே
சரணம் ஐயப்பா
55
ஓம்
குருவின் குருவே
சரணம் ஐயப்பா
56
ஓம்
குளத்துப் புழைப் பாலகனே
சரணம் ஐயப்பா
57
ஓம்
சகல கலை வல்லோனே
சரணம் ஐயப்பா
58
ஓம்
சக்தி பூஜை கொண்டவனே
சரணம் ஐயப்பா
59
ஓம்
சபரிக்கு அருள் செய்தவனே
சரணம் ஐயப்பா
60
ஓம்
சபரி பீடமே
சரணம் ஐயப்பா
61
ஓம்
சரங்குத்தி ஆலே
சரணம் ஐயப்பா
62
ஓம்
சரணகோஷப் பிரியனே
சரணம் ஐயப்பா
63
ஓம்
சற்குரு நாதனே
சரணம் ஐயப்பா
64
ஓம்
சாந்த ரூபனே
சரணம் ஐயப்பா
65
ஓம்
சாந்தி தரும் பேரழகே
சரணம் ஐயப்பா
66
ஓம்
சாஸ்தாவின் நந்தவனமே
சரணம் ஐயப்பா
67
ஓம்
சிவ வைணவ ஐக்கியமே
சரணம் ஐயப்பா
68
ஓம்
சிவன் மால் திருமகனே
சரணம் ஐயப்பா
69
ஓம்
சிறியானை வட்டமே
சரணம் ஐயப்பா
70
ஓம்
தாயின் நோய் தீர்த்தவனே
சரணம் ஐயப்பா
71
ஓம்
திரு பம்பையின் புண்ணியமே
சரணம் ஐயப்பா
72
ஓம்
திரு ராமர் பாதமே
சரணம் ஐயப்பா
73
ஓம்
திருவேணி சங்கமமே
சரணம் ஐயப்பா
74
ஓம்
தீப ஜோதித் திரு ஒளியே
சரணம் ஐயப்பா
75
ஓம்
தீராத நோய் தீர்ப்பவனே
சரணம் ஐயப்பா
76
ஓம்
துளசி மணி மார்பனே
சரணம் ஐயப்பா
77
ஓம்
தூயவுள்ளம் அளிப்பவனே
சரணம் ஐயப்பா
78
ஓம்
நாகராசப் பிரபுவே
சரணம் ஐயப்பா
79
ஓம்
நித்திய பிரம்மச் சாரியே
சரணம் ஐயப்பா
80
ஓம்
நிறைவுள்ளம் தருபவனே
சரணம் ஐயப்பா
81
ஓம்
நீல வஸ்திர தாரியே
சரணம் ஐயப்பா
82
ஓம்
நீலிமலை ஏற்றமே
சரணம் ஐயப்பா
83
ஓம்
நெய்யாபிஷேகனே
சரணம் ஐயப்பா
84
ஓம்
பகவானின் சன்னதியே
சரணம் ஐயப்பா
85
ஓம்
பக்தர்கள் இன்பனே
சரணம் ஐயப்பா
86
ஓம்
பதினெட்டாம் படியே
சரணம் ஐயப்பா
87
ஓம்
பந்தள மாமணியே
சரணம் ஐயப்பா
88
ஓம்
பம்பா நதித் தீர்த்தமே
சரணம் ஐயப்பா
89
ஓம்
பம்பா விளக்கே
சரணம் ஐயப்பா
90
ஓம்
பம்பையில் பிறந்தவனே
சரணம் ஐயப்பா
91
ஓம்
பரவசப் பேருணர்வே
சரணம் ஐயப்பா
92
ஓம்
பழவினைகள் ஒழிப்பவனே
சரணம் ஐயப்பா
93
ஓம்
பாவமெல்லாம் அழிப்பவனே
சரணம் ஐயப்பா
94
ஓம்
புலிப்பாலைக் கொணர்ந்தவனே
சரணம் ஐயப்பா
95
ஓம்
பெரியானை வட்டமே
சரணம் ஐயப்பா
96
ஓம்
பேதமையை ஒழிப்பவனே
சரணம் ஐயப்பா
97
ஓம்
பொன்னம்பல வாசனே
சரணம் ஐயப்பா
98
ஓம்
மகர ஜோதியே
சரணம் ஐயப்பா
99
ஓம்
மணிகண்ட பொருளே
சரணம் ஐயப்பா
100
ஓம்
மஞ்சமாதா திருவருளே
சரணம் ஐயப்பா
101
ஓம்
மாளிகைப் புறத்தம்மனே
சரணம் ஐயப்பா
102
ஓம்
வன்புலி வாகனனே
சரணம் ஐயப்பா
103
ஓம்
வாவரின் தோழனே
சரணம் ஐயப்பா
104
ஓம்
வில்லாளி வீரனே
சரணம் ஐயப்பா
105
ஓம்
விபூதிப் பிரியனே
சரணம் ஐயப்பா
106
ஓம்
வீரமணி கண்டனே
சரணம் ஐயப்பா
107
ஓம்
ஸ்வாமியே
சரணம் ஐயப்பா
108

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சித்து அருள்புரிய  வேண்டும்.
ஓம் அரிகர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம்
சுவாமியே சரணம் ஐயப்பா!