Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Monday, September 20, 2010

சிவயோகசாரம் 04

சிவயோகசாரம் 03ன் தொடர்ச்சி..
மாணாக்கரின்
நிலை


    உத்தம ஜென்மமாயும், வித்தைக்கு உடையவனாயும், சாந்த சற்குணம் உடையவனாயும், பற்றில்லாதவனாயும், காமசங்கற்பம் இல்லாதவனாயும், கோபத்தை வென்றவனாயும், சத்திய தருமத்தை விரும்பினவனாயும்,  குரு பணிவிடையில் பிரியமுள்ளவனாயும், மாதா பிதாக்களை உபசரிப்பவனாயும் தனது கிருத்திலிருப்பனாயும், நல்லொழுக்கம் உடையவனாயும், சற்சீடனென்னும் பக்குவம் உடைவனாயும் உள்ள மாணாக்கனே இந்த ராஜயோகத்துக்கு அதிகாரியென்று சொல்லப்படுவான். 

இத்தன்மைப்பட்ட நற்சீடன் சாட்சாத்காரத்தை உணர்ந்த ஞானாசாரியரைக் கண்டெடுத்து, அவர் திருவடிகளில் பணிந்து, அவர் மனம் களிகூறும்படி நடந்து உடல், பொருள், ஆவி மூன்றும் அச்சற்குருவின் திருவடியில் தத்தஞ்செய்து, அவரால் அநுக்கிரகிக்கும் திருவடித் தீட்சையையும், பிராணாயமத்துக்குரிய மூலமந்திரத்தில் முதல் வாக்கியத்தையும், இந்த யோகத்தின் விதிகளையும் உபதேசிக்கப்பெற்று, குருவின் சன்னிதியிலிருந்து, சற்குருவால் சொல்லாமற் சொல்லும் முதல் வாக்கியத்தை உன்னாமல் உன்னி யோகசாதனை செய்து வருங்காலையில் சுவானுபவத்தின் கண் அடையாநின்ற சம்சயங்கள் அனைத்தும் தீரும்படி அவ்வாசிரியரிடத்தில் விண்ணப்பம் அடிக்கடி செய்து கொண்டு, அந்தச் சங்கற்பம் நசிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டுவதாம். 



//..திருவடி தீட்சையென்பது குருவின் திருப்பாதத்தை சீடனின் தலைமீது வைத்து தீட்சை அளிப்பதாகும். தற்காலத்தில் திருவடி தீட்சை அளிக்கும் அளவிற்கு தகுதியுள்ள நல்லதொரு சற்குருவினை நான் கண்டதில்லை. மாறாக இறைவனிடம் திருவடி தீட்சை பெறும் பேறானது மிகச்சிறப்பானது ஆகும். திருஅருட்பிரகாச வள்ளற்‍பெருமானார் இறைவனிடம் திருவடி தீட்சைப் பெற்றவர் ஆவார்கள். 

அடுத்ததாக பிராணவாயுவின் நிலை பற்றி பூரணானந்தர் குறிப்பிடுகின்றார்.. பார்ப்போம்...//

( குறிப்பு :  எனது எழுத்துக்கள் நீல  நிறத்திலும், சிவயோகசாரம் நூலின் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் வித்தியாசத்திற்காக காட்டப்படுகின்றது.  )

6 comments:

  1. "ஓம் பூர்வ பலன்கள் சுவை ஆகுக.!
    தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
    பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
    தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!"

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி. இதை முடித்த பின் ’சிவ வாக்கியம்’ பற்றியும் விரிவாக எழுதுங்கள். நன்றி

    ReplyDelete
  3. @ அரவிந்த்
    தங்களுடைய வருகைக்கு நன்றி!
    தங்களின் ஆலோசனையின்படி அடுத்தது சிவவாக்கியம் பற்றி எழுத முயற்சிக்கின்றேன்.
    சிவவாக்கியம் pdf வடிவில் கீழ்காணும் தளத்தில் உள்ளது.
    http://www.shaivam.org/tamil/sta_sivavakkiyar.pdf
    மேலும் பல நூல்கள் பிடிஎப் மற்றும் தமிழ் யுனிகோட் வடிவில் உள்ளது. சிவவாக்கியத்தின் மூலத்திலிருந்து மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். படிப்பதற்கு எளிதாக இருக்கும்.
    சிவவாக்கியம் மூலம் புத்தக வடிவில் என்னிடம் உள்ளது. இதை அப்படியே சீர் வரிசை மாறாமல் பதம் பிரிக்காமல் உள்ளதை உள்ளபடியே வெளியிடும் எண்ணம் தோன்றியுள்ளது. இதைச் செய்ய சிவவாக்கியரின் அருள் உண்டு என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களின் ஆதரவும் தேவை.

    ReplyDelete
  4. @ jagadeesh நன்றி ! உங்களது வாசகங்கள் உண்மையே. வேள்வித்தீ மகிழ்ந்து ஆகுதிகளை அவரவர்களுக்கு அளிக்கும். அந்த வேள்வித்தீயே யோகப் பரஞ்சோதியாய் திகழ்கின்றது.

    ReplyDelete
  5. அருட்சிவஞான சித்தரே...

    தாங்கள் குறிப்பிட்ட இந்த லிங்கில் http://www.shaivam.org/tamil/sta_sivavakkiyar.pdf
    உள்ள சிவவாக்கியம் நூலில் பல பிழைகள் உள்ளது...

    ஆனால் தோழி அவர்களால் வெளியிடப்பட்ட மின்னூலில் எந்த பிழையும் இருப்பது போல் தெரியவில்லை ஆகவே மக்களுக்கு வழங்கும் தகவல்களை சரிபார்த்து வழங்கவும்..

    தோழியின் மின்னூல் பெறும் விபரம் உள்ள லிங்க்.

    http://siththarkal.blogspot.com/2010/08/blog-post_19.html

    ReplyDelete
  6. @கலைவேந்தன்
    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலைவேந்தன்.
    நான் தெரிவித்துள்ள கீழ்காணும் இணைப்பில்
    http://www.shaivam.org/tamil/sta_sivavakkiyar.pdf
    உள்ள சிவவாக்கியம் படிப்பதற்கு எளிதாக இருக்குமென்றும், மூலத்தில் உள்ளது போன்று இல்லையென்றும் குறிப்பிட்டு லிங்க் கொடுத்துள்ளேன். மேலும் சிவவாக்கியம் மூலத்தை பின்னர் நானே வெளியிடுகின்றேன். எனக்கு முன்னர் யாரேனும் மூலத்தில் உள்ளபடி வெளியிட்டுருந்தால் எனக்கு தயவு செய்து கூறுங்கள்.

    நீங்கள் கொடுத்திருக்கும் தோழியின் வலைத்தள லிங்க்
    http://siththarkal.blogspot.com/2010/08/blog-post_19.html -‍ ‍ஐ தோழி வெளியிடும்போதே நானும் பார்த்தேன். மேற்படி சிவவாக்கியம் மின்னூலை பெறுவதற்கு லிங்க் தரும்படியும் கருத்துரையில் கோரியிருந்தேன். தோழி அவர்கள் லிங்க் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. அவ்வாறு கொடுத்திருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். தோழி அவர்கள் மின்னஞ்சலில்தான் அனுப்புகின்றார்கள். நேரடியாக அவர்களின் தளத்திலிருந்து டவுன்லோடிங் இணைப்பு கொடுத்தால் அதை இங்கே இணைப்பு கொடுக்கின்றேன்.

    ஒரு செய்தி.
    தோழி அந்த பதிவில் கொடுத்துள்ள சிவவாக்கியத்தின் முதல் வரி இது
    "ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை".

    சிவவாக்கியம் மூலப்பதிப்பின் முதல் வரி பதம் பிரிக்காமல் இப்படித்தான் உள்ளது.
    "ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை".

    நமது தோழியின் சிவவாக்கியம் மின்னூலின் நேரடி டவுன்லோடு( one click) லிங்க் அல்லது முழுப்பாடல்கள் அடங்கிய தளத்தின் முகவரியை தாருங்கள்.
    நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete