காப்பு
நேரிசை வெண்பா
துவராடை யுள்ளோருந் தூயுடையா ருய்வான்
சிவயோக சாரமெனச் செப்ப-நவையில்புகழ்
கொண்டபர வைந்துகரக் கோநின் னடிகட்குத்
தண்டனிட் டேனருளைத் தா.
//மேற்படி காப்புப் பாடல் விநாயகரின் அருள்வேண்டி பாடப்பட்டுள்ளது. தெளிவாக உள்ளதால் விளக்கம் இங்கு தேவைப்படவில்லை. //
ஆசிரியர் நிலை
இந்த ராஜயோகத்தை அப்பியாசிக்கும் ஆசிரியன் தெளிந்த ஆத்துமஞானியாய், அடுத்தவர்களை ஆதரித்துப் போதிக்கத் தக்கவனாயிருக்க வேண்டியது. அதாவது சின்முத்திரையாகிய மெளன நிலை ஈதென்றும், அதைக் கைவல்லியப் படுத்துவதற்குரிய ஆசனம் முதலிய விதிகள் இவையென்றும், குண்டலி சத்தி ஈதென்றும், அதை விழிப்பிக்கும் மார்க்கம் ஈதென்றும், இதுவே சிவராஜயோகமென்றும், இந்த யோகம் செய்யத்தக்கவர் பெறத்தக்க நாதாந்தம் இதுவென்றும், இது வசமுற்றால் ஒரு மயக்கந் தோன்றும் என்றும், அது நீங்கும் வரையில் நின்றால் அருள்தரிசனம் உதயமாகும் என்றும், அவ்வனுபவம் கிடைக்கில் காண்பானுதிகள் இறக்கும் என்றும், மனம் அசையாதிருக்கும் என்றும், அப்போது அந்த நாதாந்தத்தில் பஞ்சாட்சரம் முதலியவைகள் தோன்றாது ஒடுங்கும் என்றும், இத்தண்மைப்பட்ட சுவானுபவ சாட்சாத்காரத்தை உணர்ந்த ஆத்தும ஞான ஆசாரியனாய் இருக்கவேண்டும்.
தொடர்ச்சி அடுத்த பதிவில்...
No comments:
Post a Comment