Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, September 14, 2010

நான் யார்?. விவாத மேடை


நான் யார் ?. 
நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கேள்வி இது. என்னை நானே முதலில் கேட்டுக்‍கொள்கின்றேன்.

இந்த அருட்சிவம் வலைப்பதிவின் இடுகை இடுபவரின் பெயர் அருட்சிவஞானசித்தர் என்று உள்ளதற்காக சிவயோகசாரம் 02பதிவுக்கு திரு. டுபாக்கூர் பதிவர்  பின்வருமாறு கருத்துரை கூறியுள்ளார். (இவரின் கருத்துரைக்கு நான் நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்).

//எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம்.. எனக்குத் தெரிந்து சித்தர்களாய் அறியப் படும் எவரும் தங்களை சித்தன் என்று சொல்லிக் கொண்டதாய் தெரியவில்லை. மேலும் சித்தர்களின் பாடல்களில் கூட தங்களின் குருநாதர்களின் பெயரைத்தான் சொல்லியிருக்கின்றனரே தவிர அவர்களை சித்தர்கள் என்று அடைமொழியோடு சொன்னதில்லை...அப்படி இருக்க உங்களை நீங்களே சித்தர் எனச் சொல்லிக் கொள்வது அபத்தமாக இல்லையா?. //
பெயர் இல்லாதவர் சிலரும் இதே கருத்தை கூறியுள்ளார்கள்.
இவர்கள் உண்மையை தெரிந்துகொண்டுதான் இருக்கின்றார்களா?. அல்லது சித்தர்களை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றார்களா? என்று நான் அறியவில்லை.
சரி. கேள்வி என்று ஒன்று வந்துவிட்டது?. பதிலினை தேடுவோம்.


சித்தர் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
சித்தர்கள் என்றால் யார்? சித்தர்களின் வகைப்பாடு எவை?
அவர்கள் தோற்றுவித்த கலைகள் எவை?எவை?
சித்தர் நிலை என்றால் என்றால் என்ன ?.
ஒரு சராசரி மனிதன் சித்தர் நிலை அடைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?.
இந்த கலியுகத்தில் சித்தர்கள் நம்மிடையே வாழ்கின்றார்களா?
சித்தர்கள் அவசியத்தைக் கருதி தற்காலத்தில் பிறப்பு எடுக்கின்றார்களா?.
சித்தர்கள் தற்காலத்தில் தோரயமாக எத்தனை பேர்கள் ரூபமாக, அரூபமாக உள்ளனர்?.
அருட்சிவஞானசித்தர் என்ற சொல்லுக்கு பொருள் என்னவென்று கொள்ளலாம்? (கவனிக்க அருட்சிவஞானசித்தர் என்ற சொல்லுக்கு மட்டும்).

இன்னும் பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை, தங்களது கருத்துக்களை ஆன்மீகம், சித்தர்கள் தொடர்பான வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசக, வாசகிகளை, இந்த பதிவில் பின்னூட்டக் கருத்தாகவோ, அல்லது saimeenan@gmail.com என்ற மின்முகவரிக்கு கட்டுரையாகவோ அனுப்பிவைத்து உதவும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
சித்தர்கள் தொடர்பான தளங்கள், வலைப்பதிவுகள் இருந்தாலும் அதன் முகவரியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டுகின்றேன். உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இப்பொருள் குறித்து விவாதித்து பதில் அனுப்பலாம்.

நான் எனது பதில்களையும் அவ்வப்போது இவ்வலைப்பதிவில் பதிவேற்றுகின்றேன். மேற்படி பொருள் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம் இப்பதிவில் பின்னூட்ட வடிவிலேயே வெளியிட எண்ணியுள்ளேன். சித்தர்களின் ஆசியும், என் குருநாதர் சுருளிமலைச் சித்தர் கதசசிகாரரின் ஆசியும் நான் யார்? என்று அறிந்து மீண்டும் உறுதிபடுத்தும் என்று நம்புகின்றேன்.

என்னை நான் தெளிவு படுத்திக் கொள்ள எனக்கு உதவும்படி வேண்டி இந்த விவாதத்தை சுபமாக ஆரம்பிக்கின்றேன். சுபமாகவே முடிய அருட்சிவம் என்னும் பரம்பொருளை வேண்டுகின்றேன்.
அன்புடனும்,
அருளுடனும்,
என்றும் தங்கள் நட்பை வேண்டும் ஓர் ஜீவன்.

9 comments:

 1. தலையும் புரியவில்லை, காலும் புரியல. என்ன தா சொல்ல வரீங்க..

  ReplyDelete
 2. @ Anonymous
  My dear Anonymous !

  //தலையும் புரியவில்லை, காலும் புரியல. என்ன தா சொல்ல வரீங்க..//
  உங்களுடைய இந்த கருத்துக்கான பதில்:.
  அழகான தமிழில் தேவையான வார்த்தைகளுக்கு ஆரஞ்ச் கலர் கொடுத்து தெளிவாக பதில் கேட்டிருக்கின்றேன்.
  உங்களுக்கு புரியவில்லை என்றால் இந்த பதிவை அப்படியே பிரிண்ட் ‍எடுத்து பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பதில் கிடைத்தால் எனக்கு அனுப்புங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்.

  இது நான்யார்? என்று அறியும் கண்ணாமூச்சி ஆட்டம். இந்த ஆட்டம் விளையாடத் தெரிஞ்சவங்க என்னோடு ஆடுவாங்க.
  உங்களுக்கு ஆடத்தெரிஞ்சா ஆடுங்க. இல்லையா?. ஓரமா உக்காந்து வேடிக்கை பாருங்க.
  ஆட்டம் புரிஞ்சா நீங்களும் விளையாட வாங்க.
  ஆனா ஒன்று இந்த ஆட்டத்தை மனிதர்களாக பிறந்த அத்தனை பேரும், இப்பவென்று இல்லை எப்பவாவது ஒரு நேரத்தில் ஆடித்தான் ஆக வேண்டும். இது உண்மை.

  ReplyDelete
 3. உங்கள நீங்களே சித்த என்று சொல்லிக்குவீங்கோ, அதை யாரும் எதுக்குன்னு கேட்டா பூசி மேலுகுவீங்கோ முதல்ல உங்கள சித்தன் என்று சொன்ன லூசு யாரு? வேலை வெட்டி இல்லாத பயபுள்ளைங்க... வந்துட்டாங்க நான் சித்தர், நான் கடவுள், நான் யோகின்னு கிட்டு.. முடிந்தால் இந்த கம்மெண்ட பப்ளிஷ் பண்ணுங்கப்பு..


  // தங்களது கருத்துக்களை ஆன்மீகம், சித்தர்கள் தொடர்பான வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசக, வாசகிகளை, இந்த பதிவில் பின்னூட்டக் கருத்தாகவோ, அல்லது saimeenan@gmail.com என்ற மின்முகவரிக்கு கட்டுரையாகவோ அனுப்பிவைத்து உதவும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.///

  இந்த லட்சணத்துல இது வேற..

  ReplyDelete
 4. அன்புள்ள நண்பரே...

  சித்தர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைக்கான சுட்டி இதோ...

  http://ramanans.wordpress.com/2009/09/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

  அன்புடன்
  நண்பன்

  ReplyDelete
 5. என்னோட கம்மெண்ட போட தைரியமில்லா இதுல சித்தன்னு பேரு வேற... தூ...

  ReplyDelete
 6. @ Anonymous
  நண்பரே !
  தங்களுக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 7. //சித்தர்களின் ஆசியும், என் குருநாதர் சுருளிமலைச் சித்தர் கதசசிகாரரின் ஆசியும் நான் யார்? என்று அறிந்து மீண்டும் உறுதிபடுத்தும் என்று நம்புகின்றேன். //

  1.உங்கள் குருநாதரின் ஆசி இருக்கும்போது கண்டிப்பாக உங்களுக்கு நீங்கள் யார் என்று அரியவைத்து அருள் புரிவார்.
  2. நீங்கள் பூஜிக்கும் கணபதியின் கருனையால் உங்களை உணர்ந்து அருள் பெருவீர்கள்..
  3. உங்களுக்கு அறியாதது ஒன்றுமல்ல ... தீவிர ஆன்மீக தியானத்தால் உங்களை நீங்கள் அறிவீர்கள்.. விவேகானந்தர் உணர்ந்தது போல... நானும் நான் யார் என்று தேடிக்கொண்டிருப்பதால் தங்களுக்கு முழுமையான பதிலை இந்த பதிவில் தற்பொழுது பதில்ளிக்க இயலவில்லை எனவே எனக்கு ஆண்டவன் அந்த நிலையை அறியவைத்தபின் உங்கள் இந்த விவாதத்தில் மீண்டும் கலந்து கொள்கிறேன் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்... நன்றி

  ReplyDelete
 8. @மாய உலகம்
  அன்பு நண்பரே!
  தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
  மேலும், தாங்கள் இவ்வலைப்பதிவின் கீழ்காணும் பதிவுகளையும் வாசிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  நான் யார்? 02
  http://siddharkal.blogspot.com/2010/10/02.html

  சிவயோகசாரம் 11
  http://siddharkal.blogspot.com/2010/11/11.html

  ReplyDelete
 9. ஓம் நமசிவாய நம...

  சிவம் ~ தவம் ~ சவம்.

  ஓம் நமசிவாய...

  எல்லாமே சிவமயமாக ஜீவ கோடிகள் அவதரித்து தவமாக வாழ்ந்து சமாதி அடைவது சிவமே...

  தென்னாடு உடைய சிவனே எந்நாட்டவர்க்கும் எங்கள் இறைவா போற்றி போற்றி ஓம் தத் சத் ஓம்...

  ReplyDelete