அருட்சிவஞான பீடம்
நான்காம் ஆண்டு துவக்கம்.
நிகழும் கர ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் அருட்சிவஞானபீடத்தின் நான்காம் ஆண்டு துவக்க நாளாகும்.கடந்த சர்வதாரி ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் ( 17.08.2008ல்) உலகிற்கெல்லாம் ஒளி அளிக்கும் சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாளன்று இப்பீடம் இறையருளால் துவக்கப்பட்டது. இப்பீடத்தால் மிகப்பெரிய அளவில் ஆன்மீகப் பணிகள் நடைபெறாவிட்டாலும் என் அளவில் சிற்சில ஞானப்பணிகள் நடைபெற்றுள்ளது.
அதில் ஒன்று மிகப்பழமையான சிவன் கோயிலுக்கு நந்தி எம்பெருமான் கற்சிலா விக்ரகம் (அவன் அருளாலே அவன் தாள் பணிந்து) அமைத்துக் கொடுத்தது. அந்தக் கோயிலின் சிவலிங்க வடிவம்தான். இந்த வலைப்பூவின் லோகோவில் அமைந்துள்ளது ஆகும். இத்திருக்கோயிலுக்கு நந்தியெம்பெருமான் சிலா விக்ரகம் வந்த விபரம் பின்னர் ஒரு பதிவில் தெரிவிக்கின்றேன்.
இந்த அருட்சிவஞான பீடம் செயல்பாட்டின் பொருட்டு நான் பூசை செய்து வரும் எனது ஊர் சித்திவிநாயகர் திருக்கோயிலின் நிர்வாகத்தார் வசம் சில அனுமதி மற்றும் நிபந்தனை உறுதிமொழி குறித்தான விபரங்களை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இக்கடிதத்தின் PDF நகல் இதோ கீழே இணைத்துள்ளேன். சுட்டி படிக்கவும்.
இக்கடிதத்திற்கு ஊர் மக்களிடமிருந்தும், கோவில் நிர்வாகம் வசமிருந்தும் அனுமதி அப்பொழுது கிடைத்ததின் பொருட்டு பீடமும் செயல்பட்டு வருகின்றது.
இப்பீடத்தின் அருட்செயல்பாடுகள் குறித்தான விபரங்கள் பின்னிட்டு நேரம் இருக்கும்போது பகிர்கின்றேன்.
No comments:
Post a Comment