Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Friday, August 19, 2011

ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள்



ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள்

இன்று 19.08.2011 ம் நாள் ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் ஆகும்.
அந்த யோகி எனது தம்பியின் மகன் ஆவார்.
(இந்த பதிவினையும் படியுங்கள்)
இன்றைய தினம் இக்குழந்தையின் பிறந்த நாளினை முன்னிட்டு எங்களது ஊர் சித்திவிநாயகர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், அன்னதானமும், யோகியின் பிறந்த நேரம் இரவு 7.30க்கு வேள்வியும், உடன் தீப ஆராதனையும் நடைபெறும்.


(கோவை உயரியல் பூங்காவில் அலைபேசியில் எடுத்த புகைப்படம்)
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தைதான் யோகி.  முழுப்பெயரே யோகி தான். பிறந்தது மூலம் நட்சத்திரம் 2ம் பாதம். கும்ப லக்கினம். பஞ்சமத்தில் கேது.  சப்தம ஸ்தானம் சிம்மத்தில் சூரியன் மற்றும் புதன்.

ஒரு ஆன்மாவிற்கு கிடைக்கும் ஆசிதான் வாழ்வின் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால், இக்குழந்தையை ஆசிர்வதிக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

5 comments:

  1. முதலாம் ஆண்டு பிறந்த நாள் கொண்டடும் குழந்தை யோகிக்கு, வாழ்த்துகள் ஆண்டவன் அருளும், சித்தர்களின் ஆசியும்,என்றும் பெற இறைவனை வேண்டும்

    என்றும் அன்புடன்
    "இறைவனடி யுவராஜா"

    ReplyDelete
  2. குழந்தை யோகிக்கு எங்கள் வாழ்த்துக்கள். நீடூழி வாழ்வாங்கு வாழ இறைவன் அருள் செய்யட்டும்.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. Happy birthday wishes to yogi. wish him a healthy and prosperous life.

    ReplyDelete
  4. @''இறைவனடி யுவராஜா'',
    @ Sankar Gurusamy, & @ jagadeesh

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    Please Visit this post:
    நன்றிகள் பல - அருட்சிவமாகிய பரம்பொருளுக்கும், வாழ்த்தியவர்களுக்கும்.

    http://siddharkal.blogspot.com/2011/08/blog-post_22.html

    ReplyDelete
  5. யோகிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ரமணன்

    ReplyDelete