நாம் திட்டமிட்டு செய்யும் காரியம்
எதிர்பாராமல் தோல்வியடையும்போது நமது மனம் சோர்வுறுகின்றது.
அதே சமயம் திட்டமிடாமல் செய்யும் காரியும் வெற்றியடையும் போது மனம் கர்வம் அடைகின்றது.
ஆனால் திட்டமிட்ட காரியம்
திட்டமிட்டதை விட சிறப்பாக அமையும் போது மனம் இறைவனின் அருளாற்றலை நினைத்து ஆனந்தப்படுகிறது. இப்படித்தான் குழந்தை யோகியின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் நல்லபடியாக, திட்டமிட்டதைவிட சிறப்பாக (முந்தைய பதிவில் கூறியுள்ள நிகழ்ச்சி நிரலின்படி) இறைவன் அருளால் நடந்தது.
திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் சிங்கபுரி பதிகம் பாடிய
குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளம் அருள்மிகு சுப்புராயர் சன்னதியில்
37வருடங்களுக்கு முன் எனது பிறந்த நாளை முன்னிட்டு இரவு 8.50 மணியளவில் வேள்வியுடன் கூடிய சிறப்பு ஆராதனையுடன் எனது முதல் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
எனது தகப்பனார் 40 வருடங்கள் பல சிவபூசைகள் செய்து வரம்
இருந்து, பிறந்தவன் நான்.
எனது தகப்பனார் 40 வருடங்களுக்கு
மேலாக எத்தனையோ அன்பர்களுக்கு தமது கையால் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்தவர். அவர்களுக்கு எல்லாம் குழந்தை பாக்கியம் உடனே உண்டானது. ஏனோ, இறைவன் இவருக்கு மட்டும் அவ்வளவு சீக்கிரம் கருணை காட்டவில்லை.
எனது தகப்பனாரின் முதல் மனைவி 25 வருடங்கள் குழந்தைப் பேறு
இல்லாமல் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவியாகிய எனது தாயாருக்கு 15 வருடங்கள் குழந்தை இல்லை. இவர் சிறந்த முருக பக்தர். உறங்கப் போனாலும் முருகா, விழித்தாலும் முருகா என்று எந்த நேரமும் பழனிமலை ஆண்டவனை அழைப்பவர்.
நான் எனது தகப்பனாரின் 70 வது வயதில் பிறந்தவன் . எனக்கு எட்டு வயதாகும் போது எனது தகப்பனார் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அருளாளர்கள் பிறப்பின் ரகசியத்தை
அந்த இறைவனும், ஞானபுருஷர்களும் மட்டுமே அறிந்த ஒன்று.
இந்த அருளாளனை அறிந்த ஞானபுருஷர்களும் உண்டு.
இதன் விபரம் பின்னிட்டு நேரம் வரும்போது பதிவேற்றுகின்றேன்.
( இதனை சிலர் தம்பட்டம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. நான்
பொருட்படுத்தப்போவதில்லை.)
என்னை அறிந்து, என்னுடன் நட்பு
பூணும் அன்பர்களுக்கு என்னளவில் நான் அறிந்த ஞானவிடயங்களை சத்திய
தர்மத்தோடு, பொய்யின்றி உண்மையாக தெரிவிப்பேன். இதனை அறிந்து பயன்பெறுவது என்பது அந்தந்த ஆத்மாக்களின் பூர்வ புண்ணியத்தை பொறுத்தது.
ஒருவருக்கு புத்திர பாக்கியம்
என்பது அவரவர் பூர்வ புண்ணியத்தைப் பொறுத்தே அமையும். நல்ல ஆத்மாக்கள் சிறந்த ஒழுக்கமுள்ள தாய் தந்தையருக்கு பிறக்கும். அவ்வாறே, ஒழக்கமுள்ள தாய் தந்தையருக்கு நல்ல ஆத்மாக்கள் குழந்தையாக பிறக்கும். இவ்வகையில் எனது தம்பி மகன் யோகியின் ஜாதகத்தில் சில நல்ல அம்சங்கள் உள்ளது. எனது தந்தையாரின் குணாதியசத்தை போன்றே அமைவான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால்தான் எனது தாயாரின் அறிவுரைப்படி அவனின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு சிலவிடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
எனது மகள் காயத்ரி பிறந்தது
01.07.2000 சனிக்கிழமை
ஆனி அமாவாசை.
( எனது குருநாதர் சித்திபெற்றது ஆனி அமாவாசை)மிருக சீரட நட்சத்திரம். கடக லக்கினம். லக்கினத்தில் கேது. 12 ம் மிடத்தில் ராகு, குரு , சனி தவிர்த்து ஏனைய ஐந்த கிரகங்கள் அமைந்துள்ளது. )
எனது மகன் குருபிரகாஷ் பிறந்தது
01.02.2003 சனிக்கிழமை
தை அமாவாசை.
திருவோண நட்சத்திரம். இருவருமே ஒன்றாம் தேதி, சனிக்கிழமை, அமாவாசையில் பிறந்தவர்கள்.
(சோதிடவியல்படி அமாவாசையை நான்கு
பாகமாக பிரித்து பலன் காணுவது மரபு.)
நிற்க,
சிவயோகசாரம் தொடருக்கு ரிவிசன் செய்ய வேண்டும், என் ஞானவாழ்வில் சம்பந்தப்பட்ட திருப்பரங்குன்றம் சற்குரு மாயாண்டி சுவாமிகள் பற்றி கூற வேண்டும். சுருளிமலை சித்த அனுபவங்கள் பற்றி கூறவேண்டும். கொல்லிமலை சித்த அனுபவங்களைப் பற்றி கூறவேண்டும். மதுரை
மீனாட்சியம்மன் அருளினைப் பற்றி கூறவேண்டும்.
அனானி கந்தசாமி அவர்களுக்கு பதில்
சொல்லவேண்டும் (போகர் நவபாஷாண முருகன் சிலை செய்தது குறித்து)
இன்னும் எத்தனையோ வேண்டும் உள்ளது.
நான் முழுநேர கணினிப் பணியாளர் என்பதால் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்து பார்த்து கண்கள் சோர்ந்துவிடுகிறது. கைகளும் டைப்பிங் செய்வதால் அசந்து விடுகின்றது. எனது பணி அறநிலையத்துறை சார்ந்ததால் எந்த நேரம் பார்த்தாலும் ஏதேனும் ஒரு திருக்கோயிலுக்கு நான் பணி செய்வதாகவே அமைந்து விடுகின்றது.
இதனையும் தெய்வீக காரியமென்றே நினைத்து சந்தோஷமாக செய்கின்றேன்.
இதற்கிடையில் நெட் connection க்கு
என்று வாங்கிய நோக்கியா போனும் போனவாரத்தில் சிம்மோடு தொலைந்துவிட்டது.
பிராட்பேண்டும் நோ. நண்பரிடமிருந்து பெற்ற nokia 7210 supernova செல்
மூலம் இப்ப நேரம் ஒடிக்கிட்டிருக்கு.
(இந்த மாடல் நல்லாயிருக்கு. ஆனா இப்ப வெளிவருவது இல்லை.)
கடந்த ஒரு வாரமாக போஸ்ட் பப்ளிஷ், கமென்ட்ஸ் பப்ளிஷிங், மின்னஞ்சல்
பார்ப்பது எல்லாம் இந்த செல்லில்தான்.
இப்படி பலதரப்பட்ட எனது சூழ்நிலையில் பதிவுகள் சரியாக இடமுடியவில்லை. வீட்டில் உள்ள PC யின் பழுதினை நீக்கி விட்டால் சற்று சிரமம் குறையும். இதற்கெல்லாம் அந்த மகாதேவனின் கருணை வேண்டும். பார்ப்போம் அவன் திருவிளையாடலை.
மீண்டும் நிற்க,
முந்தைய பதிவில் பின்னூட்டத்தின் மூலம் குழந்தை யோகிக்கு ஆசியையும், வாழ்த்தையும்
தெரிவித்திருந்த திரு. இறைவனடி யுவராஜா,
மதிப்பிற்குரிய ஐயா சங்கர் குருசாமி,
எனது அன்பிற்குரிய ஜெகதீஷ்
ஆகியோர்களுக்கும், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கும், நேரில் கலந்துகொண்டு ஆசிர்வதித்த பெரியோர்களுக்கும், இவைகள் எல்லாவற்றையும் நல்லவிதமாக நடப்பித்த பரம்பொருள் அருட்சிவத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் பல.
சென்ற பதிவில் குழந்தையை கையில்
வைத்திருப்பதும் நானே.
இந்த பதிவில் வேள்வி செய்பவனும்
நானே.
சில நேரத்தில் Tools &
Software சகிதம் கம்ப்யூட்டரை குடைபவனும் நானே.
அப்பப்ப நம்ம கெட்டப் மாறும். உலகமே ஒரு நாடக மேடைன்னு பெரியவங்க சொல்லியிருப்பது சரிதானுங்க?.
BirthDay Function Cell
Photos கீழே:
நான் பூஜைப் பணி செய்யும் சித்திவிநாயர் கோயிலின் கர்ப்ப கிரகம்.
இந்த கர்ப்பகிரகத்தில்தான் நான் தியானிப்பது வழக்கம்.