சிவயோகசாரம் 18
சிவயோகசாரம் 17ன் தொடர்ச்சி...
இப்பஞ்சதத்துவத்தைக் கண்டறிவதற்கு விவரம் சொல்லுவோம்.
1- வது தத்துவங்களின் நடை;
2-வது சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்:
3- வது சுவாசத்தினால் தத்துவத்தின் அடையாளம்;
4- வது தத்துவங்களின் நிறம்;
5 வது தத்துவங்களின் சுவை;
6 வது சுவாசத்தின் அளவு;
7வது தத்துவங்களின் அசைவு;
8 வது தத்துவங்களின் பலன்.
ஆகிய இந்த எட்டு விதங்களினால் பஞ்ச தத்துவத்தைக் கண்டறிய வேண்டும்.
1- வது தத்துவங்களின் நடை;
2-வது சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்:
3- வது சுவாசத்தினால் தத்துவத்தின் அடையாளம்;
4- வது தத்துவங்களின் நிறம்;
5 வது தத்துவங்களின் சுவை;
6 வது சுவாசத்தின் அளவு;
7வது தத்துவங்களின் அசைவு;
8 வது தத்துவங்களின் பலன்.
ஆகிய இந்த எட்டு விதங்களினால் பஞ்ச தத்துவத்தைக் கண்டறிய வேண்டும்.
மாணாக்கன் எந்த வாயுவில் எந்தத் தத்துவம் நடக்கிறதோ, அதனை கண்டறிய வேண்டும். மேலும், முக்கியமாகக் கவனிக்க வேண்டுவது பஞ்சேந்திரியங்களைச் சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு, தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக அப்பியாசிக்க வேண்டும். அதிகமாக அப்பியாசித்தால் அசெளக்கியம் நேரிடும். குரு எவ்வளவு பிரமாணஞ் சொல்லுவாரோ, அவ்வளவுதான் நடக்கவேண்டும்.
(1)இந்த சண்முகி முத்திரையை மூடிக்கொண்டு அப்பியாசிக்கும் காலத்தில் மஞ்சள் நிறம் தோன்றினால் பிருதிவி என்றும், வெண்ணிறம் தோன்றினால் அப்பு என்றும், சிவப்பு நிறம் தோன்றினால் தேயுவென்றும், பச்சை நிறம் தோன்றினால் வாயுவென்றும், கறுப்பு நிறம் தோன்றினால் ஆகாயமென்றும் சொல்லப்படும்.
(2) மாணாக்கன் கண்ணாடியைத் தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அதன்மேல் சுவாசத்தை விட்டால், அது நாற்சதுரமாக இருந்தால் பிருதிவி என்றும், அரையுருண்டை வடிவமாக இருந்தால் அப்புவென்றும், முக்கோணமாக இருந்தால் தேயுவென்றும், அறுகோண உருண்டை வடிவமாக இருந்தால் வாயுவென்றும், சிறுபுள்ளிகள் மாதிரியிருந்தால் ஆகாயமென்றும் அறிய வேண்டும்.
(3) மாணாக்கன் சுவாசம் விடும்போது சுவாசம் நேராகப் போனால் பிருதிவி, கீழாகப்போனால் அப்பு, மேலாகப்போனால் தேயு, ஒழுங்கீனமாய்போனால் வாயு, அடங்கிப்போனால் ஆகாசமென்று அறிய வேண்டும்.
(4) பிருதிவி -மஞ்சள், அப்பு- வெண்மை, அக்கினி- சிவப்பு, வாயு -பச்சை , ஆகாயம்- கருப்பு என இவைகளை கண்டறிய வேண்டும்.
தொடரும். ...
ஒரு ரிவிசன் மாதிரி, முன் சொன்ன சில விசயங்களை சற்று அசை போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
@Sankar Gurusamy
ReplyDeleteவணக்கம் ஐயா,
தங்களின் கருத்துப்படி ஒரு ரிவிசன் செய்து விடலாம்.
மீண்டும் அருள்தர வந்திருக்கும் தங்களை வரவேற்று
ReplyDeleteமகிழ்கிறேன்..
சங்கர் அவர்கள் சொன்னதை அடியவனும் வழிமொழிகிறேன்
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
@ சிவ.சி.மா. ஜானகிராமன்
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு நன்றி!.