Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Thursday, July 14, 2011

சிவயோகசாரம் 17


சிவயோகசாரம் 17

சிவயோகசாரம் 16 ன் தொடர்ச்சி....
பஞ்ச தத்துவ நிலை

இனி, சூட்சும பஞ்சாட்சர தியானத்தின் ஆதாரமாகிய பஞ்ச தத்துவங்களைக் குரு சம்பிரதாயத்தால் அறிய வேண்டியதும், அந்தப் பஞ்ச தத்துவங்களின் குறிப்புகளின் விவரணமுங் கூறப்படும். அதாவது முன் சொன்ன மூன்ற நாடிகளின் குணங்களையும் சுத்தமாக அறிந்துகொண்டு ஒன்றை ஒன்றில் மாற்றிக் குண்டலியை அடையாமல் தத்துவங்களை அப்பியசிக்கலாகாது. முதலிற் சொல்லி இருக்கின்ற நாடிகளை தன் வசப்படுத்திக் கொள்ளாமல், யோகிகள் தத்துவங்களை குறித்து ஆரம்பிக்கப்பட்டது. போஜனம், மலம் கழித்தல், போகஞ் செய்தல் இவை மூன்றும் சூரிய நாடியில் செய்ய வேண்டுபவை. தாகம் ஜலவிருத்தி இவைகளை இடகலையில் செய்ய வேண்டும்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து தத்துவங்களும் மூன்று நாடிகளில் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டே வருகின்றன. இந்த தத்துவங்களைக் கண்டறிவதற்கு அடியில் வருமாறு கூறுவோம்.
அதாவது எவர்கள் இந்த மூன்று வாயுக்களை அப்பியசித்திருக்கிறார்களோ, அவர்கள்தாம் இந்த யோகத்திற்குரியவர்கள். இந்த உலகம் பஞ்சபூதத்தால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. இதனை கண்டுகொள்பவருக்கு ஆயுள் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்கள், பூஜை முதலாகிய உபசாரங்கள் செய்யப்பெற்று மேலாவார்கள்.
இந்து ஐந்து தத்துவங்களும் சத்திய லோகம், பூலோகம், மிருத்தியுலோகம் முதலாகிய இடங்களில் வியாபித்திருக்கின்றன. அவைகட்கு அன்னியமாக ஒரு வஸ்துவும் ஏற்படாது.

தொடரும்....

2 comments:

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவிட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. @ Sankar Gurusamy

    நன்றி! ஐயா.
    நிறைய பதிவிட வேண்டும் என்று நினைக்கின்றேன்.
    தட்டச்சு செய்ய நேரம் கிடைக்க வேண்டும்.
    அந்த மகாலிங்கம் அருள்புரிய வேண்டும்.

    ReplyDelete