இன்று சுவாமி விவேகாநந்தரின் பிறந்த நாள்.
நரேந்திரன் என்னும் ஒரு கர்மஞானி இந்த பூமிக்கு வந்த நாள். இந்து தர்மத்தை உலக அரங்கில் பறை சாற்றிய வீரத்திருமகனை நாமெல்லாம் போற்றித் தொழும் நாள்.
இந்த வாழ்க்கை குறுகியது. உலகின் வீண் ஆடம்பரங்கள் நிலையற்றவை. பிறருக்காக உயிர்வாழ்பவர்களே வாழ்பவர்கள் மற்றவர்கள் வாழவில்லை. அவர்கள் இறந்துபட்டவர்களே.-சுவாமி விவேகாநந்தர்.
இளைஞர். இளைஞிகளுக்கு சுவாமி கூறிய அருள்மொழிகள் பல. அதில் மேற்கூறியவைகளும் ஒன்று. இது இன்றைய காலகட்டத்தில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். சமூகத்தில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள் சிலரை விட மன ஊனமுற்றவர்கள் பலர். அவ்வாறான பலருக்கும் சுவாமி கூறுவது இவை.
எழுந்து நில்
துணிவு கொள்
வலிமையுடன் இரு
இந்த தாரக மந்திரம் ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பெறவேண்டும்.
உடல் சோர்வுடனும், மனச்சோர்வுடனும் உள்ள ஒருவரிடம் நீங்கள் கூற வேண்டிய மந்திரம் எழுந்து நில், துணிவு கொள், வலிமையுடன் இரு.
ஒருவர் தன் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது.
வலிமையுடன் துணிவு கொண்டு எழுந்து நின்று போராடவேண்டும். வெற்றித் திருமகள் உங்களிடம் குடிகொள்வாள்.
மிக குறுகிய கால வாழ்க்கையில் நிலையற்ற வீண் ஆடம்பரங்களை தவிர்த்து, பிறருக்காக வாழ வேண்டும். சமூகத்தில் உள்ளவர்களின் குறைகளை கழுகுப் பார்வை கொண்டு தேடிக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும். தன்னலமற்ற தொண்டு புரிய வேண்டும். ஒரு ஜீவன் வாட்டமுறும்போது, அவ்வாட்டத்தை போக்கும் உங்களின் செயலே மிக மகோன்னதமானது.
விவேகாநந்தரின் அமுத மொழிகளை மனதில் நிறுத்துங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். பிறர் வாழ்வையும் வளம்பெறச் செய்யுங்கள்.
விவேகானந்தர் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், இந்தியா எங்கேயோ சென்றிருக்கும்.
ReplyDelete