அருட்சிவஞான பீடத்தின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா
அன்புடையீர், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இரயில்வே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருட்சிவஞான பீடத்தின்
18 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்
ஸ்ரீவலஞ்சுழி-இடஞ்சுழி விநாயகர், ஸ்ரீசித்தேஸ்வரர், ஸ்ரீநந்தீஸ்வரர், ஸ்ரீவாலை, லோபமுத்ரா உடனுறை அகத்தீசர், பதஞ்சலி, போகர், திருமூலர், கோரக்கர் ஆகிய சித்தர் பெருமக்கள் பீடத்தின்
8 ஆம் ஆண்டு துவக்க விழா
சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்மத்தில் பிரவேசிக்கும் (நிகழும்) ஸ்ரீவிசுவாவசு ஆண்டு ஆவணி மாதம் 1 ம் நாள் (17.08.2025) அன்று காலையில் நடைபெற உள்ளது.
அச்சமயம் சித்தர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், கும்ப பூஜை, சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில்,
நேரில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ள
வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் வாழும் அருட்சிவஞான பீடத்தின் அன்பர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்யும் பொருட்டு
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தங்களது பெயர் பிறந்த நட்சத்திரம், ஊர், அலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர், நட்சத்திரம் மட்டும் ஆகியவற்றை எங்களுக்கு
saimeenan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு
செய்தியாக (Text Message) மட்டும்
அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தங்களால் குறிப்பிடப்படும் தகவல்கள் அனைத்தும்
தெய்வீக சித்தர்கள் வழிபாட்டு சேவையின் அடிப்படையில் உலக மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் நல்லவை எல்லாம் பெற்று வளமுடன் வாழ்ந்திடும் பொருட்டு
பௌர்ணமி நாட்கள், ஸ்ரீஅகத்தியர் திருக்கல்யாண விழா மற்றும் ஆண்டு விழா பிரார்த்தனைகளுக்கு
மட்டும் பயன்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்.
அருட்சிவஞான பீட அன்பர்கள்
அகில உலகம்.
No comments:
Post a Comment