Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, November 23, 2010

சிவயோகசாரம் 13

சிவயோகசாரம் 13

சென்ற சிவயோகசாரம்  பதிவுகளில் சுவாசம் பற்றி பார்த்தோம்.
  தற்போது சுவாசம் நடைபெறும் வடகலை, இடகலை, சுழுமுனையை நமது விருப்பத்திற்கேற்ப செயல்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.

பொதுவாக சித்தர்களும், யோகிகளும் இம்முறையைப் பற்றி பலவாறாக கூறியுள்ளனர். இங்கே சில வழிகளை கூறுகின்றேன்.
  முதலில் உங்களுக்கு எந்த நாசியில் சுவாசம் நடக்கின்றது என்று கவனியுங்கள். மூக்கின் அருகே விரல்களின் மேற்பகுதியை கொண்டு சென்று மூச்சை சற்று வேகமாக வெளிவிடும்போது விரல்களின் மீது படும் சுவாசக்காற்று இடது மூக்கிலிருந்து அதிமாக வெளிவந்தால் இடகலை நடக்கின்றதென்றும், வலது மூக்கிலிருந்து அதிகமாக ‍வெளிவந்தால் வடகலை நடக்கின்றதென்றும், இருமூக்கிலும் சமமாக வந்தால் சுழுமுனை நடக்கின்றதென்றும் தெரிந்துகொள்ளலாம்.
நிற்க,
சுவாசம் இடகலை நடக்கும் சமயத்தில் அதனை வடகலையில் மாற்றும் முறையானது பின்வருமாறு:
நமது உடலானது புவியீர்ப்பு விசைக்கு உட்பட்டது என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த ஈர்ப்பு விசை நமக்கு இங்கு உதவுகின்றது.
 இடப்பக்கம் ஒருக்களித்து படுத்தாலோ, இடது  கையினை   தலைக்கு  தாங்கு  கொடுத்து  படுத்தாலோ, இடது காலை தரையில் ஊன்றி ஒற்றைக்காலில் தவம் செய்வது போல் செய்தாலோ, இடது காலின் கட்டைவிரலின் மீது, வலது காலின் கட்டைவிரலை வைத்து அழுத்தம் கொடுத்தாலோ, அல்லது யோகிகள் பயன்படுத்தம் யோகதண்டத்தை (மரத்தால் செய்யப்பட்டது) இடது கையில் முட்டுக்கொடுத்து சித்தர்கள் தவத்தில் இருப்பது போன்று வைத்து தவம் செய்தாலோ சுவாசம் கண்டிப்பாக வலது நாசியில் நடைபெறும்.
வலப்பக்கம்  ஒருக்களித்து  படுத்தாலோ,  வலது  கையினை  தலைக்கு தாங்கு கொடுத்து படுத்தாலோ, வலது காலை தரையில் ஊன்றி ஒற்றைக்காலில் தவம் செய்வது போல் செய்தாலோ, வலது காலின் கட்டைவிரலின் மீது, இடது காலின் கட்டைவிரலை வைத்து அழுத்தம் கொடுத்தாலோ, அல்லது யோகிகள் பயன்படுத்தம் யோகதண்டத்தை  வலது கையில் முட்டுக்கொடுத்து சித்தர்கள் தவத்தில் இருப்பது போன்று வைத்து தவம் செய்தாலோ சுவாசம் கண்டிப்பாக இடது நாசியில் நடைபெறும்.
நமது உடல் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னும், பின்னும் சாயாமல் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி செய்தால் சுவாசம் சுழுமுனையில் நடக்கும். இதற்கு ஆசனத்தில் பத்மாசனம், சவாசனம், சாந்தியாசனம் உகந்தது.
இது எனது அனுபவ பூர்வ உண்மை.  என்னால் வடகலையை, சில நிமிடங்களில் இடகலையாகவும், இடதை வலமாகவும் மாற்ற முடியும். இந்த பதிவை எழுதும் போதும் பயிற்சி செய்துவிட்டுதான் எழுதுகின்றேன். உங்களாலும் முடியும். பயிற்சிதான் தேவை. தகுந்த குருமுகமாக அறிந்துகொண்டு விளக்கம் பெற்று நீங்களும் செய்யமுடியும். மிக எளிதானதுதான்.
  சித்தர்கள் யோகதண்டம் வைத்திருப்பதும் சுவாசத்தை கட்டுப்படுத்துவதற்குதான். சித்தர்கள் அருளால், எனது பூர்வஜென்ம பலத்தால், இந்தப்பிறவியில் எனக்கு  மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜ் சுவாமிகள் (இவர் ஒரு சிவயோகி. தன்னை நந்தியாகவே பாவித்து சிவனை சுமப்பவர். இவரை நான் முதன்முதலில் சந்தித்தது வடலூரில்)  மூலம் யோகதண்டம் கிடைத்தது. ( யோகதண்டம் கிடைத்த விதம் பற்றி பின்னர் சொல்கிறேன்) நான் அதை பயன்படுத்தி வருகின்றேன். இதே போன்று சித்தர்களின் ஒற்றைக்கால் தவமும் மிக சக்தி வாய்ந்தது. இல்லற வாசிகள் ஒற்றைக்கால் தவம் இருப்பதும், யோகதண்டம் பயன்டுத்துவதும் சற்றுக் கடினம். பூர்வபுண்ணிய பயன் இருந்தாலோ, விட்டுகுறை தொட்டகுறை இருந்தாலோதான் முடியும். இந்தப்பிறவியில் முதன்முதலாக வாசியோகம் செய்பவர்கள் இங்கு மேலே கூறிய எளிய முறையை பயன்படுத்தி பரிட்சார்த்தம் செய்து பார்க்கலாம். பார்க்க வேண்டுகிறேன்.  சித்தர்களுடன் தொடர்பு கொள்வதற்கு வடகலையில் அப்பியாசம் செய்து நிஷ்டையில் அமர வேண்டும். அவ்வாறு செய்தால் கண்டிப்பாக அவர்களின் ஆசிகிடைக்கும். உங்களுடன் தொடர்பு கொள்வார்கள். அவர்களின் தரிசனமும் கிடைக்கும். நான் ஒரு முறை போகர் பெருமானிடம் தொடர்பு கொண்டபோது பெருமானும் இதை உறுதிபடுத்தினார். (இதன் விபரமும் பின்வரும்.) 
நாடிசுத்திமுறை, பிராணயாமம், வாசியோகம் இவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. இவை மூன்றும் ஒன்றல்ல. முதல் இரண்டும் அடிப்படை. மூன்றாவது அருளைத் தருவது. பல்வேறு உண்மைகளை உங்களுக்கு விளக்குவது. முதல் இரண்டினை இல்லறவாசிகள் எளிதாக செய்யலாம். மூன்றாவது சற்றுக் கடினம். முயற்சி இருந்தால் வெற்றி கிடைக்கும். உங்களுக்கும் சித்தர்களின் அருளால் வெற்றி கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
//.....தொடரும்.....//

Photo's | Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper

ஓம் ஸ்ரீ சாய்ராம்


இன்று பகவான் ஸ்ரீ  சத்ய சாய்பாபாவின் 85 வது அவதார தினவிழா
நான் சென்னையில் இருந்தபோது பாபாவின் பிறந்த நாளின் போது நண்பர்களுடன் சேர்ந்து பஜனை செய்தல், சேவைகள் செய்தல் போன்ற நற்காரியங்களை செய்து வருவோம். 
தற்போது வடலூரில் இருப்பதால் சுவாமியை நினைத்து பிரார்த்தனை மட்டும் செய்ய முடிந்தது. 
சுவாமிக்கும் எனக்கும்  நிறைய ஆன்மீக தொடர்பு உள்ளது. இத்தொடர்புகள், சுவாமி என்மூலம் செய்து அருள் அற்புதங்கள் இவ்வலைப்பதிவில் பின்னர் தொடராக வெளிவரும். 

தற்சமயம் சுவாமியின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தினமலர்.காம் -ல் பார்த்து மகிழுங்கள்
www.dinamalar.com க்கு நன்றி !

இணைப்பு
 
Photo's | Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper

Thursday, November 11, 2010

சிவயோகசாரம் 12 (பிற தள இணைப்பு)

அருளுடையீர்! வணக்கம்,
இந்த சிவயோகசாரம் பதிவில் கூறப்படும் விஷயம் தொடர்பான கருத்துக்கள் பிற தளங்களிலும் உள்ளதை இறைவன் அருளால் பார்க்க நேர்ந்தது.
மேற்படி தளத்தில் உள்ள கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. நான் சொல்லவரும் சில கருத்துக்களை, எனக்கு முன்பே சிலர் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு எனது அருளார்ந்த நன்றிகள். 


அவ்வாறு நான் பார்த்தவைகளில்
திரு. ஹரிமணிகண்டன் அவர்களின் http://sadhanandaswamigal.blogspot.com ல் "சூட்சுமம் திறந்த திருமந்திரம்" என்ற தலைப்பில் உள்ள பதிவையும்  தாங்கள் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த பதிவில் உள்ள சில வரிகள் இதோ கீழே...

//...*இந்த மூச்சுக் காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே மனம் ஒருமுகப்படும்.

* இறைவனைப் பற்றிக் கொண்டு மெய்ஞ் ஞான வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு கட்டுப்படும்.

* பொய்ஞானம் எனும் மாயைகளில் சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு, மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய எதுவுமே வசப்படாது. முக்தி நிலையும் இவர்களுக்கு சாத்தியப்படாது.....//

//....வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்....//

//...இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.....//

மேற்படி பதிவின் இணைப்பிற்கு இங்கே சுட்டுக

சிவயோகசாரம் தொடர்பதிவை வாசிப்பவர்களுக்கு மேற்படி பதிவில் உள்ள விபரங்கள் பயன் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

// முன்னரே இந்த இணைப்பு பதிவை வாசித்தவர்கள் சற்று பொறுக்கவும். அடுத்த பதிவில் நான் வருகின்றேன்.//

Tuesday, November 9, 2010

சிவயோகசாரம் 11

சிவயோகசாரம் 10 ன் தொடர்ச்சி..

சுவாசம் என்றால் என்ன?.
சுவாசம் என்பது ஒரு தன்னிச்சை (Automatic)செயல்.

உடல், உயிர் இவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி பினைந்திருக்க அவசியம் சுவாசம் தேவை.

உடலுள் உயிர் இருக்கின்றதா? உயிருள் உடல் இருக்கின்றதா? என்பதை அவரவர் அனுபவத்தின்கண் கண்டறியலாம்.

மனிதன் ஒரு பொம்மைக்கு சாவி கொடுத்து இயங்க செய்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அவன் கொடுத்த சாவியின் வேகம் குறைந்ததும் பொம்மையின் இயக்கம் தன்னாலே நின்றுவிடும்.

அதேபோன்று நம்மை படைத்த இறைவன் நமக்கும், நமது வினைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவு விசை கொடுத்து தாயின் கருவறையிலிருந்து,  பூமிப் பந்தில் இறக்கி வைத்து  இயங்க விடுகின்றான். அவன் கொடுத்த விசை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமாக இருக்கும். ஒருவருக்கு ஒரு முடுக்கு விசை, மற்றொருவருக்கு இரு முடுக்கு விசை, பிறிதொருவருக்கு மூன்று முடுக்கு விசை, இதேபோன்று பலருக்கும் பல்வேறு வகையில் பலதரப்பட்ட முடுக்கு விசை கொடுத்து தன்னிச்சையாக இயங்க வைத்து வேடிக்கை பார்க்கின்றான். இதற்கு மற்றைய சுவாசித்தலைக் கொண்ட உயிரினங்களும் விதிவிலக்கல்ல.

ஆனால், அவன்கொடுத்த விசையினால் தன்னிச்சையாக இயங்க வைத்ததோடுமின்றி இங்கே மனித இனங்களுக்கென்று தன்னிச்சையாக செயல்படும் புத்தியையும் கூடவே கொடுத்து இயங்க வைத்துள்ளான். அவன் கொடுத்த விசையின் (சுவாசத்தின்) காலம் முடிவதற்குள், தனக்கென்று கொடுத்துள்ள புத்தியைக் கொண்டு நாம் குட்டிக் கரணம் போடலாம், தோப்புக் கரணம் போடலாம், வீர வேசம் காட்டலாம், பிறரை அழிக்க நினைக்கலாம், செல்போன், கம்ப்யூட்டர், நானோ மேட்டர், ரோபோ (அட நம்ம இயந்திரன்தானுங்க) தயாரிக்கலாம். இன்னும் என்னென்னவோ செய்யலாம். அல்லது ஏன் என்னை இப்படி விசை கொடுத்து இயங்க வைத்தாய் என்று இறைவனிடமே அழுது புலம்பி சண்டைக்கும் போகலாம்.
எல்லாம் செய்யலாம். கூடவே நம்ம மேட்டரையும் (சுவாச பயிற்சிதாங்க) சேர்த்து செய்யலாம்.

இறைவன் கொடுத்த விசையின் காலம் முடிவதற்குள் நான் யார் என்பதை அறிந்து பரம்பொருளிடம் சரணாகதி அடைவதுதான் ஒரு வழி.
சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் இதைத்தான் சொல்கின்றனர். அப்படி இறைவனிடம் சரண் அடையும் வழிகளில் (மார்க்கங்களில்) இந்த சிவயோகசாரம் தொடரில்  கூறப்படும் வழியும் ஒன்று.
இறைவன் கொடுத்த சாவியின் விசைக்காலம் முடிவதற்குள்,  இறைவனிடம் முழுசரணாகதி அடையாவிட்டால், விசைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் நம்மை கையிலெடுத்து மீண்டும் விசை கொடுத்து விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பான் இறைவன்.

நிற்க,
மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியில் விடுகிறான் எனவும், இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான் எனவும் நம் முன்னோர்கள் அறிந்து கூறியுள்ளனர்.

எத்தனை நாள் நாம் சுவாசிப்போம் என்று யாராலும் கூறமுடியாது.(விதிவிலக்கு: சித்தர்கள்)

சுவாசம் என்பது அவசியமான ஒன்று.
நான் சுவாசிக்க மாட்டேன் என்று யாராலும் அடம் பிடித்து கூறமுடியாது. (நீங்க அடம் பிடிச்சு சொல்வீங்களா?.)

ஆனால் அந்த சுவாசத்தை (விசையை) முறைப்படுத்தி இறைவன் கொடுத்த விசையின் வேகம் குறைவதற்குள்(ஆயுள் முடிவதற்குள்), நான் யார் ? என்ற கேள்வியை எனக்குள் நானே கேட்டு, அதன் விடையாக,  நான் பிரம்மத்தின் சொரூபம். ஆனால் நானே பிரம்மம் அல்ல.   எனது தாயும், தந்தையும், சுற்றத்தார் அனைவரும், உலக ஜீவராசிகள் அனைத்தும் அந்த பிரம்மத்தின் சொரூபம்தான் என்பதை அறிந்து, நான் எனும் எனது ஜீவஆத்மா பிரம்மத்தோடு ஐக்கியமாக முயற்சிசெய்வேன்.
ஒருக்கால் விசை முடிவதற்குள் என்னால் இறைவனோடு ஐக்கியமாக முடியாவிட்டால், ஒன்றும் கவலைப்படமாட்டேன். மறுபடியும் இறைவனிடம் வாய்ப்பு கேட்டு, விசை கொடுக்கச் சொல்லி மன்றாடி கேட்டுப் பெற்று (நீ விளையாடற ஆட்டம் எனக்கு தெரியும். இந்த தடவையாவது நான் ஜெயிக்கிறேன்னு சொல்லி) மீண்டும் இந்த பூமியில் விளையாட வருவேன்.

//...ரொம்ப பதிவில ஒரே கருத்தை (யோகம்,சரம்) பத்தி லெக்சர் அடிச்சா போரடிக்கும். அதான் கொஞ்சம் ரூட் மாத்தி இந்த பதிவுல தீபாவளி முடிஞ்சவுடன் இப்படி பதிச்சிருக்கேன்.. மறுபடியும் விளையாட அடுத்த பதிவுல வர்றேன்...//