Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, August 17, 2010

அருட்சிவம்

இந்த பதிவை இன்று விக்ருதி வருடம் ஆவணி மாதம் 1ந்‍தேதி (17-08-2010) சூரிய உதயத்திற்கு முன்பு வலையேற்ற முயன்றேன். சிறு சறுக்கல் அதனால் மதியம் 12.30 மணியளவில், முன்பு கூறியிருந்த படி இந்த வலைப்பூ அழகாக இன்று மலர்ந்தது. இந்த வலைப்பூ மொக்கிலே கருகாமல் மலர வைத்ததற்கு பரம்பொருள் அருட்சிவத்தினை நான் வந்தனம் செய்கின்றேன். இதற்கு ஆசியளித்த எனது குருநாதரும் சுருளிமலை சித்தருமான கதசசிகார சித்தருக்கும், ஸ்ரீ சீரடி(புட்டபர்த்தி) சாய்நாதனுக்கும் எனது அன்பான வந்தனங்கள்.
சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மகான்களை பற்றியும், அவர்கள் மனித குலம் உய்ய தோற்றுவித்த ஜோதிட, மணி, மந்திர, ஒளஷதம் மற்றும் இன்ன பிற சித்தர் கலைகள் பற்றி எனது 16 வயது ஆரம்பம் முதல் 35 வயது முடிவு வரை ஆராய்ச்சி செய்தேன். ஆராய்ச்சி என்பதை விட சித்தர்களின் அருளால் இக்கலைகளை பயின்‍றேன் என்று கூறுவதுதான் சரியானது. முடிவில் நான் யார் என்பதைப் பற்றி சில சித்தர்கள் எனக்கு அறிவித்தார்கள். சித்தர்கள் கலைகளில் நான் கற்றவை ஜோதிடம், இரசமணி கட்டுதல், சித்த மருத்துவம், சரக்கலை, யோகம், அஷ்ட கர்ம மந்திரம், சித்தர்களுடன் தொடர்பு கொள்ளுதல், இறந்தவர்களின் ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளுதல் இன்னும் பிற.

இவைகள் அல்லாமல் நான் உங்களுடன் தொடர்பு கொள்வதற்கு மிக மிக முக்கியமான கணினி இயல் என்னும் கலையையும் சித்தர்களின் அருளினாலே கற்று தேர்ந்தேன். இதற்கு சாய்பாபாவின் ஆசியும் உண்டு. பொழுது போக்கிற்காக நான் கற்றுக்கொண்ட கணினி இயல் இன்று எனது ஆன்ம வளர்ச்சிக்காக, உலக நன்மைக்காக, என்னைப்போன்றே, சித்தர்களின் ஆசியும்பெற்று, பரம்பொருளாகிய சிவத்தின் அருள் பெற்று என்றும் இறவா நிலைபெறுவதற்குண்டான வழிகளை கூறும் வலைப்பதிவாளர்கள் ஸ்ரீலங்கத்து தோழி, ‍ஜெகதீஸ்வரன், தமிழ்மணி, ரமணன், ஓம்நமசிவாய மதுரை சிவராம், சதயம் போன்றவர்களுக்கு கண் போன்றது இந்த கணினி இயல்.
எனது வாழ்க்கை இல்வாழ்க்கையிலிருந்து ஞானவாழ்க்கையா ?. ஞானவாழ்க்கையிலிருந்து
இல்வாழ்க்கையா ?. என்பதில் எனது வாழ்க்கை எனது 35 வயது வரை இல்வாழ்க்கையிலிருந்து ஞானவாழ்க்கையாகவும், 36 வயது ஆரம்பம் முதல் ஞானவாழ்க்கையிலிருந்து இல்வாழ்க்கையாகவும்
செல்கின்றது. இதன் விபரம் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

நான் பார்வையிட்டவை பகுதியில் எனக்கு பிடித்த வலைப்பதிவுகளின் இணைப்புகளை கொடுத்துள்ளேன். மேலும் இணைப்புகள் தொடரும். முன்னரே இந்த வலைத்தளங்களை பார்த்தவர்கள் விட்டுவிடவும்.
இன்று அருட்சிவ ஞான பீடம் தமது 3 வது அகவையை தொடங்குகின்றது. எனது இந்த சரீரம் 38வது அகவையை தொடங்குகின்றது. (ஆன்மாவிற்கு அகவை கணக்கிட முடியவில்லை)
அடுத்த பதிவில் இந்த வலைப்பதிவு ‍உருவாக காரணமாக இருந்த சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு பற்றியும், உருவான சூழ்நிலை பற்றியும், சித்தர்களின் அருளைப்பற்றியும், இந்த அருட்சிவத்தின் நோக்கம் பற்றியும் கூறுகின்றேன்.
அருட்சிவத்தின் அருள் தொடரும்........

13 comments:

  1. உங்கள் அடுத்த இடுகையை எதிர்பார்த்து இருக்கிறோம். நன்றி.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  3. மகாகனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ சரவணக்குமார சுவாமிகள்August 19, 2010 at 3:42 PM

    தங்களின் முயற்சி வெற்றியடைய எமது ஆசிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

    ReplyDelete
  4. உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்..

    ReplyDelete
  5. @ மகாகனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ சரவணக்குமார சுவாமிகள்.
    சுவாமிகளின் ஆசியை சிரம் தாழ்ந்தும், வாழ்த்துகளை மனமுவந்தும் பெற்றுக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  6. @பெயரில்லாவதருக்கு..
    பெயரில்லா என்பவர்....//உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்.. //

    பெயரில்லாதவர் இந்த வலைப்பதிவை பார்வையிட்டதற்கு முதற்கண் நன்றி !
    உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்.. என்று கருத்துரை அனுப்பியுள்ளீர்கள் அதற்கும் நன்றி!

    இந்த பதிவின் முதற்பதிவே இப்பதிவு.
    இனி வரும் பதிவுகளில் அருட்சிவஞான சித்தர் என்பதின் விளக்கம் (சாத்தியமானது) தொடர்ச்சியாக, வலைப்பதிவுகளாக வரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஆன்மீகத்தின் மீதும், சித்தர்கள் மீதும் நம்பிக்கை இருந்தால் இந்த வலைப்பதிவை தொடர்ந்து பார்த்து வாருங்கள். இல்லையெனில் உங்களது பொன்னான நேரத்தை இங்கு செலவிடவேண்டாம்.

    யாரும் தனக்குதானே பெயர் வைத்துக் கொள்ளமாட்டார்கள். உங்களுக்கும் கூட உங்களது தாய், தந்தையார் ஒரு பெயர் வைத்திருப்பார்களே?. வைத்ததை மறைத்து கருத்துரை அனுப்பியுள்ளீர்கள். நன்று.
    தங்களது பெயரை நான் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றேன்.

    ReplyDelete
  7. //அடுத்த பதிவில் இந்த வலைப்பதிவு ‍உருவாக காரணமாக இருந்த சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு பற்றியும், உருவான சூழ்நிலை பற்றியும்,///

    என்ன சொல்றீங்கன்னு பார்க்கணும்.. எப்போ அடுத்த பதிவு போடுவீங்க அதுக்கும் ஏதும் நல்ல நேரம் இருக்கா?

    ReplyDelete
  8. பயப்படாம என்னுடைய கருத்துக்கள வெளியிடுங்க சித்தரே..

    ReplyDelete
  9. நன்றி ஐயா, ஏதோ என்னால் முடிந்த பங்களிப்பு அவளவு தான். உங்களை போன்றோர் நல்லாசி என்றும் தேவை.உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  10. ஏய் சித்தனே! பதிவு போடலையா? பதிவு போடாமேலே இந்த பில்டப் கொடுககிரியேப்பா?

    ReplyDelete
  11. பயப்படாம என்னுடைய கருத்துக்கள வெளியிடுசித்தரே.

    ReplyDelete
  12. ஐயா, comments இல் சில விஷமிகள் anonoyomous வழியாக நாகரிகமற்ற வகையில் கருதுரைப்பார்கள், எனவே anonyomous comments எல்லாம் வராத மாறி settings ல போய் cancel பண்ணிடுங்க.

    ReplyDelete
  13. @ஜெகதீஷ்
    நன்றி ! ஜெகதீஷ்.
    இது போன்ற விஷமிகளின் கமென்ட்ஸ்களை நீக்குவதற்கு வழி தெரிந்திருந்தாலும் என்னதான் இவர்கள் கூறுகின்றார்கள் என்பதை பார்ப்போமே என்று அனுமதித்துவிட்டேன். இனி இது போன்ற கமென்ட்ஸை ஸ்பேம் செய்து விடுகின்றேன். இது போன்ற பெயரில்லாதவர்களைப்பற்றி, வரும் பதிவில் வலையேற்ற எழுதி டைப் செய்து வருகின்றேன். அடுத்த பதிவினை கண்டிப்பாக பார்த்து தங்களின் கருத்துக்களை கூறுங்கள். நாளை அடுத்த பதிவு வரலாம் என்று நினைக்கின்றேன். இறைவன் சித்தம் எதுவோ? அது கண்டிப்பாக நடக்கும்.

    ReplyDelete