Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, January 25, 2011

Parvathamalai


பர்வதமலை
இந்த வீடியோ தொகுப்பு நான் இணையத்தில் தேடிய போது கிடைத்தது. நீங்களும் பார்த்து  மகிழுங்கள்.
இத்தொகுப்பை தயாரித்தவர்களுக்கு எனது நன்றி!
2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த மலைக்கு சென்று வந்தோம். சற்று கடினமான ஏற்றமுடையது. சித்தர்கள் மேல் ஈடுபாடுடையவர்களும், சிவ வழிபாடு செய்பவர்களும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய இடம். எனது ஒன்று விட்ட அண்ணனும் அவர்களுடைய நண்பர்களும் அடிக்கடி இம்மலைக்கு கடலூரிலிருந்து சென்று வருவார்கள்.  நீங்களும் ஒருமுறை ‍சென்று வாருங்களேன். 

18 siddhar- Edaikadar.mpg

திரு. எஸ். பிரகாஷ் மற்றும் கர்மயோகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !


Saturday, January 15, 2011

இனிய விக்ருதி வருட தைப்பொங்கல் நல் வாழ்த்துகள் !

தை மகள் பிறந்து விட்டாள்
எல்லா வளங்களையும்,  
சகல ஐஸ்வர்யங்களையும் தங்களுக்கு அளித்து,  
தங்கள் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றட்டும்.


இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துகள்!

Wednesday, January 12, 2011

எழுந்து நில், துணிவு கொள், வலிமையுடன் இரு.



இன்று சுவாமி விவேகாநந்தரின் பிறந்த நாள்.
நரேந்திரன் என்னும் ஒரு கர்மஞானி இந்த பூமிக்கு வந்த நாள். இந்து தர்மத்தை உலக அரங்கில் பறை சாற்றிய வீரத்திருமகனை நாமெல்லாம் போற்றித் தொழும் நாள்.

இந்த வாழ்க்கை குறுகியது. உலகின் வீண் ஆடம்பரங்கள் நிலையற்றவை. பிறருக்காக உயிர்வாழ்பவர்களே வாழ்பவர்கள் மற்றவர்கள் வாழவில்லை. அவர்கள் இறந்துபட்டவர்களே.-சுவாமி விவேகாநந்தர்.

இளைஞர். இளைஞிகளுக்கு சுவாமி கூறிய அருள்மொழிகள் பல. அதில் மேற்கூறியவைகளும் ஒன்று. இது இன்றைய காலகட்டத்தில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். சமூகத்தில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள் சிலரை விட மன ஊனமுற்றவர்கள் பலர். அவ்வாறான பலருக்கும் சுவாமி கூறுவது இவை.

எழுந்து நில்
துணிவு கொள்
வலிமையுடன் இரு

இந்த தாரக மந்திரம் ஒவ்‍வொருவரின் மனதிலும் இடம் பெறவேண்டும்.
உடல் சோர்வுடனும், மனச்சோர்வுடனும் உள்ள ஒருவரிடம் நீங்கள் கூற வேண்டிய மந்திரம் எழுந்து நில், துணிவு கொள், வலிமையுடன் இரு.

ஒருவர் தன் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது.
வலிமையுடன் துணிவு கொண்டு எழுந்து நின்று போராடவேண்டும். வெற்றித் திருமகள் உங்களிடம் குடிகொள்வாள்.

மிக குறுகிய கால வாழ்க்கையில் நிலையற்ற வீண் ஆடம்பரங்களை தவிர்த்து, பிறருக்காக வாழ வேண்டும். சமூகத்தில் உள்ளவர்களின் குறைகளை கழுகுப் பார்வை கொண்டு ‍தேடிக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும். தன்னலமற்ற தொண்டு புரிய வேண்டும். ஒரு ஜீவன் வாட்டமுறும்போது, ‍அவ்வாட்டத்தை போக்கும் உங்களின் செயலே மிக மகோன்னதமானது.

விவேகாநந்தரின் அமுத மொழிகளை மனதில் நிறுத்துங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். பிறர் வாழ்வையும் வளம்பெறச் செய்யுங்கள்.