Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, November 8, 2011

கோரக்க சித்தர் குருபூஜை

 கோரக்க சித்தர் குருபூஜை - நாள் : 10.11.2011

ஒவ்வொரு தமிழ் ஐப்பசி மாதமும் (பெளர்ணமி) பரணி நட்சத்திரத்தில் மகான் கோரக்க சித்தரின் குருபூஜை விழா நடைபெறும் என்பது சித்தர்களை பூஜிப்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அது போன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மூகாசாபரூர் ( பரூர்பட்டி) ஊரிலுள்ள கோரக்கரின் ஜீவசமாதி ஆலயத்திலும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. (மேற்படி ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதாக அன்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்).
இந்த ஐப்பசி பெளர்ணமியன்று அருட்சிவஞான பீடத்தில் பெளர்ணமி பூஜை, பிரார்த்தனை, வேள்வி நடைபெற உள்ளதால், என்னால் எங்கும் செல்ல இயலவில்லை. இந்த பெளர்ணமி இரவில் கோரக்க சித்தரின் திருவடியைப் பிடித்துக்கொண்டு வழிபாடு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளேன். இறைச்சித்தமும், சித்த சித்தமும் அருள் புரிய வேண்டும். 
நான் சித்தர்கள் வழியில் நிற்பதால்,  கோரக்க சித்தரோடு அவ்வப்போது தொடர்பு கொண்டு அருளாசி பெற்று வருவது வழக்கம். இதற்கிடையில் , நேற்றைய தினம் ( 07.11.2011) வடலூரில் சத்திய ஞானசபைக்கு அருகில் உள்ள ஒரு புத்தகக்கடையில் சித்தர்கள் தொடர்பான புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கும் போது, பாட்டுச்சித்தர் ஓம் சக்தி நாராயண சாமி அவர்கள் எழுதிய ஸ்ரீகோரக்க சித்தர் கதையும் கருத்தும் ( கோரக்கர் அருளிய சந்திர ரேகை 200 மூலமும் உரையும்) என்ற நூல் கிடைத்தது. அதில் கோரக்க சித்தரின் வரலாறு மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
மேலும் சந்திர ரேகை 200 -க்கு தெளிவுரையும் மிகுந்த கருத்துச்செறிவுடன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  சித்தர்கள் வழிபாடு செய்பவர்கள்  அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டிய நூல் இது ஆகும்.  சித்தரின் குருபூஜையை ஒட்டி இந்த நூல்கிடைத்தது எனக்கு மிக மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நில்லாமல்,  இன்று 08.11.2011 ல் வடலூர் வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞானசபைக்கும்,  சத்திய தருமச்சாலைக்கும் கன்னியாகுமரி பால பிரஜாபதி அடிகளார் (அய்யாவழி) வருகை தந்திருந்தார்கள். அவர் வரும் சமயம் நான் கோரக்கரின் சந்திர ரேகை 200 நூலினை படித்துக்கொண்டிருந்தேன். உடனடியாக அடிகளாரிடம் சந்திர ரேகை 200 நூலில் தங்களின் கையொப்பம் இட்டு தரும்படி கேட்டு, அப்படியே அவரும் நூலில் கையெழுத்திட்டு கொடுத்து என்னைப்பற்றி விபரங்களை கேட்டு அறிந்து, ஆசியும் வழங்கினார். அடிகளாரிடம் ஆசி பெற்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. 
நிற்க, வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்க சித்தரின் குருபூ‍ஜை விழா மிகச்சிறப்பாக நடைபெறும் என்று லட்சக்கணக்கான அன்பர்கள் அவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் பாட்டுசித்தர் ஓம் சக்திநாராயணசாமி அவர்கள் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், எந்த ஒரு விஷயத்தை இந்த வலைத்தளத்தில் குறிப்பிடுவதாக இருந்தாலும் அதனைப்பற்றி இணையத்தில் search செய்துவிட்டுதான் பதிவெழுத ஆரம்பிப்பேன். கோரக்கர் சித்தர் பற்றி மேலும் சில தகவல்கள் இங்கும் குறிப்பிடலாம் என்று நான் நினைத்திருந்ததால், அதற்கு வேலையே இல்லாமல் எனக்கு முன்பே சில அன்பர்கள் வலையுலகத்தில் பதிவேற்றியுள்ளார்கள். அவர்களுக்கு இறைவனும், சித்தர்களும் சகல சித்திகளையும், சக்திகளையும், அருளையும் அளிப்பார்கள் என்று எண்ணலாம். வரும் பதிவுகளில் கொல்லி மலை பயணத்தின் போது, கோரக்கர் குகை சென்று வந்தது ( மிகசுவராசியமான, ஆன்மீகமான)  குறித்து பதிவேற்ற முயற்சிக்கின்றேன். இறைவனும் சித்தர்களும் அருள்புரியவேண்டும். 

நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த விபரங்களை, அந்ததந்த தளத்தின் முகவரியை கொடுத்துள்ளேன். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 
( முன்னரே இந்த பதிவுகளை படித்தவர்கள் தவிர்த்துவிடலாம். )

 1. கோரக்கர் பற்றிய சில தகவல்கள் 
http://18siddhar.blogspot.com/2011/11/blog-post.html
மேற்காணும் இனணப்பில் வடக்கு பொய்கை நல்லூர் கோரக்க சித்தரின் ஜீவசமாதி புகைப்படம் உள்ளது. 
அவசியம் பார்க்க வேண்டிய பதிவு.

2. சித்தர்கள் வரலாறு-10
http://vs-sk.blogspot.com/2011/07/10.html
இந்த தளம் சித்தர்கள் வரலாறு பற்றி கூறுகின்றது. இதில் கோரக்க சித்தரின் வரலாறும் உள்ளது.  

3. ராசி நக்ஷத்ரம் ஏற்ற சித்தர் திருத்தலங்கள்
http://bhogarsiddhar.blogspot.com/2011_01_01_archive.html
இந்த பதிவு நான் தேடியதில் ஆச்சர்யப்பட வைத்தது.  ராசி நட்சத்திரத்திற்கேற்ப வழிபடவேண்டி சித்தர் தலங்கள் குறித்து ஒரு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 
இதில் எனது பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி க்கு குறிப்பிட்டுள்ள ஸ்தலத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம். எந்த மதுரையை நோக்கியும், சுந்தரானந்த சித்தரை நோக்கியும், திருப்பரங்குன்றம் மச்சமுனி சித்தர் ஸ்தலத்தை நோக்கியும் நான் செல்கின்றேனோ அதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்லாடம்பட்டி பற்றி நான் இதுவரை அறியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன். 
நீங்களும் உங்களுக்கேற்ற ராசி நட்சத்திரத்தின்படி பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பிடப்பட்டுள்ளவை உங்களுக்கு சரியாக வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம். அனைத்து 

சித்தர் ஜீவசமாதிகளையும் தரிசித்து ஆனந்தம் கொள்ள ஏதுவாக இருங்கள். சித்தர்களின் கருணைப்பார்வை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். 

18 comments:

 1. WHILE APPRECIATING YOUR ARTICLE ABOUT KORAKAR SIDDHAR ,I HAVE THE APPREHENSION THAT THE JEEVA SAMADHI OF THE SIDDHAR IS LOCATED AT VADAKKU POIGAI NALLUR,NAGAPATINAM.BUT YOU HAVE WRITTEN THAT "கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மூகாசாபரூர் ( பரூர்பட்டி) ஊரிலுள்ள கோரக்கரின் ஜீவசமாதி ஆலயத்திலும் " WHICH STATES THAT THE JEEVA SAMADHI IS LOCATED AT PARUR PATTI.WHERE IS THE SAMADHI ACTUALLY LOCATED.DO YOU HAVE ANY CREDIBLE INFORMATION
  WITH REGARDS

  KASIRAJAN(pkaasi252982@gmail.com)

  ReplyDelete
  Replies
  1. மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி
   " ஓம் நம சிவாய "
   ஞானியர்களின் திருவடியை பூஜிப்போம். ஞானம் பெற்று இன்புற்று வாழ்வோம்.
   18 சித்தர்களில் ஒருவரான மச்சேந்திரர் அவர்கள் கொல்லிமலையில் இருந்து செல்லும் போது சிவபுரத்தில் ஒரு வீட்டில் யாசகம் கேட்க அந்த அம்மையார் அவரைப் பார்த்து குழந்தை பாக்கியம் பெற அசிர்வதிக்கும்படி கேட்க அதன்படி மச்சேந்திரர் அந்த அம்மையாருக்கு விபூதி,பிரசாதம் வழங்கி சென்றார். அந்த பெண்மணி அதை உட்கொள்ளாமல் குப்பையில் கொட்ட,அந்த குப்பையில்உள்ள கோரையின் மத்தியில் இருந்து தோன்றிய காரணத்தால் இவர் கோரக்கர்சித்தர் என அழைக்கப்பட்டார் . இவர் அட்டாங்க சித்தயோகம் அடைந்தவர் என்பதால் இவரது ஜீவ சமாதி எட்டு இடத்தில் அமைந்துள்ளது என தெரியவருகிறது .
   இவர் மற்ற சித்தர்களை விட ஒரு மாறுபட்ட சித்தர் ஆற்றலோடும்,துணிச்சல்லோடும்,அச்சமற்றதன்மை உடையவர் .எதையும் வெளிபடையாக பேசக்கூடியவர் .ஏழை எளிய மக்களளுக்கு தான் எழுதிய நூல்கள் மூலம் பல அறிய பொக்கிஷத்தை அள்ளி கொடுத்தவர்.பிணிகளையும்,வினைகளையும் அகற்ற வழி கண்டவர்.காயத்ரி ஜெபம் செய்து அன்னை வாலாம்பிகை அருளையும்,உமையாளிடம் ஞானப்பால் உண்டு பெரும் ஞானியானவர்.ககன மார்கம் கண்டவர்,செம்பை பொன்னாக்கி தன் குருவுக்கு கொடுத்தவர்.இவர் செய்த அற்புதங்கள் பல,அப்பேர்பட்ட மகான் அவர்கள் முகாசபரூர் ஹரிக்கும் சிவனுக்கும் இடையே அமர்ந்த நிலையில் சமாதியாகியுள்ளார்.அமர்நிலை சமாதிக்கு மிக அற்புத சக்தி உண்டு .
   அவரது ஜீவ சமாதியில் பிரதி வியாழன்,பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் மக்களளுக்கு பரிபாஷையில் அருள்வாக்கு அளித்து ஆசிர்வாதம் செய்கின்றார் மற்றும் பரணி நட்சத்திரத்தன்று அன்னதானம் வழங்கபடுகிறது .மேலும் அவர் தன் பக்தர் ஒருவருக்கு தியான நிலையில் உறைத்த 108 மந்திரம்,அவ ர் பரூரில் ஏன் ஜீவசமாதி ஆனதிற்கான சூட்சம விவரத்தையும் விளக்கியுள்ளார் .மகான் கோரக்கரின் மந்திர சக்கரத்துடன் கூடிய புதுமையான ஞான நூல் வெளியிடப்பட்டுள்ளது.அதனை பெற்று மகானின் முழு அருள் பெற வேண்டுகிறோம்,
   குருஅருள்
   குருவிற்கு மேலான தத்துவம் இல்லை .மகான் கோரக்கரை குருவாக ஏற்று அவரது திருவடிகளில் நமது வாழ்வை சமர்பிப்போம் .நமது வாழ்வை அவரிடம் ஒப்படைத்துவிட்டால் அதனை அவர்,அவர்களது கர்ம வினைகளுக்கு ஏற்ப மகான் நல்வினையை நிர்ணயித்து அருள் புரிவார்.எனவே குருவின் அருளுக்கு இறைவன் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.ஏனென்றால் குருவால் நிச்சயித்து இருக்கும் கர்மா,ஈஸ்வர நியதிக்கு உட்பட்டே இருக்கும் அதைத்தான் குரு நமக்கு வழங்குவார்.சித்தர்கள் அனைவரும் சிவத்தல் உருவாக்கப்பட்டமையால்,சிவத்தின் வல்லமையுடன் தான் சீடர்களுக்கு சித்தர்கள் பணியாற்ற இவ்வுலகத்திற்கு வந்துள்ளார்கள. எனவே மகான்கள் ஜீவன்களின் கர்மாவை தூய்மைப்படுத்தி அவர்களுக்கு அருள்படர்ந்த ஆத்மா சாதனை செய்து சிவத்திடம் ஐக்கியம் அடைய செய்வதே பணியாகும்.எனவே குரு அருள் இல்லாமல் இறையருள் பெற இயலாது என்பதை அறிவோம்.
   ஞானிகளை ஏன் வணங்க வேண்டும் ?
   ஞானிகளை வணங்கினால் நாம் செய்த பாவம் தீரும்.பாவம் தீர்ந்தால் அறியாமை நீங்கி,தெளிவான அறிவுள்ளவர்கள் தான் நல்வினை,தீவினை அறிய முடியும்.அப்போது தீவினை நீங்கி நல்வினைப் பெருக்கி கொண்டால்,மகான் கோரக்கரின் அருள் கிடைக்கும் .குரு அருள் கிடைத்தால் குடும்ப பிரச்சினை,குழந்தைப்பாக்கியம்,கடன்தொல்லை ,தடைபட்ட திருமணம்,இதரபிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்க்கை பெற
   இறையருள் கிட்டும் .அப்போது அந்த பரம் பொருளை தரிசித்து பெருவாழ்வு வாழ்வீர்கள்.

   மகான் ஸ்ரீ கோரக்கரின் ஜீவ சமாதி உள்ள இடங்கள்

   1 .முகாசபரூர் ( விருத்தாசலம்-கடலூர் மாவட்டம் ).
   2 .வடக்கு பொய்கைநல்லூர் ( நாகை மாவட்டம் ).
   3 .பொதிகைமலை
   4 .கொல்லிமலை
   5 .ஆணைமலை
   6 .பத்மாசுரன்மலை ( திரிகோணமலை )
   7 .கோராக்பூர்
   8 .கோரக்நாத்திடல்
   நேபாளாத்தில் உள்ள காட்மாண்டுவில் கோரக்கர் ஆலயம் உள்ளது .

   Delete
  2. மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி

  3. Thqnk u ur information.om nama sivaya....

   Delete
  4. Thqnk u ur information.om nama sivaya....

   Delete
 2. WHILE APPRECIATING YOUR ARTICLE ABOUT KORAKAR SIDDHAR ,I HAVE THE APPREHENSION THAT THE JEEVA SAMADHI OF THE SIDDHAR IS LOCATED AT VADAKKU POIGAI NALLUR,NAGAPATINAM.BUT YOU HAVE WRITTEN THAT "கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மூகாசாபரூர் ( பரூர்பட்டி) ஊரிலுள்ள கோரக்கரின் ஜீவசமாதி ஆலயத்திலும் " WHICH STATES THAT THE JEEVA SAMADHI IS LOCATED AT PARUR PATTI.WHERE IS THE SAMADHI ACTUALLY LOCATED.DO YOU HAVE ANY CREDIBLE INFORMATION
  WITH REGARDS

  KASIRAJAN(pkaasi252982@gmail.com)

  ReplyDelete
 3. @ kuma252982
  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!,
  மேற்படி பதிவில் விருத்தாசலம் ராமமூர்த்தி ஐயா அவர்களைத்தான் அன்பர் என்று குறிப்பிட்டுள்ளேன்.
  தற்போது அவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரின் அனுமதியோடு அலைபேசி எண்ணை உங்களின் தெய்வீக நலனுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன்.
  மேலும், அய்யா அவர்கள் எனக்கு அனுப்பிவைத்த மின்னஞ்சல் அழைப்பை அப்படியே இங்கு கொடுக்கின்றேன். இதில் தங்களுக்கான விவரங்கள் கிடைக்கும். மேலும் சந்தேகம் எனில் அய்யா அவர்களிடம் அலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். சித்தர்களின் ஆசி இருந்தால் அய்யாவே உங்களை அழைத்து செல்வார். மூகாசாபரூர் ஐப்பசி ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பூஜை கொண்டாடப்படுகிறது என்ற விவரத்தையும் அய்யா அவர்கள் இன்று அலைபேசியில் தெரிவித்தார்.
  அய்யாவின் வலைத்தளத்திற்கு சென்று சதுரகிரி பற்றிய வலைத்தளத்தை அவசியம் பாருங்கள்.

  மின்னஞ்சல் தகவல்
  "........தங்களது மெயிலுக்கு நன்றி!
  வணக்கம்,தங்களது மெயிலை கண்டு,மகிழ்ச்சியடைந்தேன்
  சித்தர்களின் தொடர்பு நீடிக்கட்டும்.
  கோரக்கரின் ஜீவ சமாதி விருதாச்சலத்தில் இருந்து 12 km தொலைவிலுள்ள
  முகாசபரூர் என்ற கிராமத்தில் உள்ளது.கோவிலில் தற்பொழுது சீரமைப்பு
  பணிகள் நடைபெற்று வருவதால் வருகின்ற நவம்பர் 18 அன்று குருபூஜை
  நடைபெற இருப்பதால் அன்று வருகை தரலாம்.

  மகான் குறித்த தொடர்புக்கு:-

  மகான் கோரக்கர் அருள்வாக்கு பெற்ற சித்தர்

  திரு.V .R .மூர்த்தி SUPT Rtd From Govt press.ஜோதிடர்,
  ஸ்ரீ அகத்தியர் திருமணத்தகவல் மையம்
  132 /இ ராமதாஸ் நகர் ,2 -வது தெரு,
  விருத்தாசலம் ,கடலூர் மாவட்டம்,
  தமிழ்நாடு -606001, செல் :8056609 842
  . Email: moorthy.koarakar@gmail.com
  moorthy_korakar@rediffmail.com

  blog: mahansrikorakkarsiddhar.blogspot.com
  ......."

  ReplyDelete
 4. அப்போ கோரக்கர் மூகாசாபரூர் ல் ஜீவசமாதி ஆகவில்லையா ?அங்கு இருக்கும் கோவில் என்ன ? கொஞ்சம் தெளிவாக விளக்கவும் .
  நன்றி
  காசிராஜன்

  ReplyDelete
 5. @ kuma252982.

  //..அப்போ கோரக்கர் மூகாசாபரூர் ல் ஜீவசமாதி ஆகவில்லையா ?அங்கு இருக்கும் கோவில் என்ன ? கொஞ்சம் தெளிவாக விளக்கவும் //
  கோரக்க சித்தர் பரூர்பட்டி என்னும் முகாசாபரூரில் ஜீவசமாதி ஆனார் என்பது கோரக்கரின் பாடலிலேயே உள்ளது. இங்கு உள்ளது சிவன் கோயில். அதன் அருகிலேயே கோரக்கரின் ஜீவசமாதி உள்ளது.

  வேறொரு சமயம் விளக்கத்துடன், புகைப்படத்துடன், முகாசாபரூர் குறித்து தனியாக ஒரு பதிவு வெளியிடுகின்றேன்.

  ReplyDelete

 6. @kuma252982

  சித்தர்கள் பல இடத்தில் நீண்ட தவம் புரிந்து சமாதி நிலை கொண்டு, மண்ணில் புதையுண்டு மறு படியும் வேறு இடத்தில் திரிவார்கள். கோரக்க முனிவரும் அது போல கோரக்பூர், நாகை, பேரூர், கோர குண்டம் என்று பல இடங்களில் சமாதி நிலை கொண்டு ஜீவ தளங்கள் அமைத்தவர்.

  http://18siddhar.blogspot.in/2011/11/blog-post.html

  ReplyDelete
 7. Hi,

  I need the copy of that book ஸ்ரீகோரக்க சித்தர் கதையும் கருத்தும் ( கோரக்கர் அருளிய சந்திர ரேகை 200 மூலமும் உரையும்)

  Could you send me a copy(xerox) of it, or any where I can buy online..

  sarvasub[at]gmail[dot]com
  -saravanan

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரருக்கு,
   சந்திரரேகை ( மூலம் மட்டும் )மேலம் சில நூல்கள்
   onlin ல் வாங்க : முகவரி
   http://udumalai.com/?prd=korakkar%20(%20chandirarekai%20-%20namanaasath%20thiravukol%20ravimekalai%20-%20muththaram%20)&page=products&id=9599

   நான் குறிப்பிட்டுள்ள ஸ்ரீகோரக்க சித்தர் கதையும் கருத்தும் என்ற நூலின் விவரத்தை விரைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

   Delete
  2. இந்த பதிவினையும் வாசிக்கவும்.

   http://www.aanmigakkadal.com/2012/03/blog-post_06.html

   Delete
 8. Dear All People Korakkar Sidhar Jeeva samathi is Located at M.Parur,
  Tk, Cuddalure Dt,

  Regards
  M.Gurunathan9092742681

  ReplyDelete
 9. Sir I need the book. Pl let me know where I can buy. Tnx

  ReplyDelete
 10. KULADAMPATTI is NEAR MADURAI 16 KMS MADURAI-VADIPPATTI- KODAI ROAD -ROAD

  ReplyDelete