Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Thursday, February 24, 2011

சிவயோகசாரம் 16


சிவயோகசாரம் 15 ன் தொடர்ச்சி ...
அஜபாவின் நிலை

இந்த யோகத்திற்குரிய ஏகாந்த ஸ்தானத்தில் பத்மாசனமிட்டு உட்கார்ந்து அஷ்டகந்த தூபமிடவேண்டும். இந்த யோகத்திற்காக ஏற்படுத்திய அறையானது, மிக்க நலமாக இருக்க வேண்டும். தான் தனியேதான் இருக்க வேண்டும். இதில் சொல்லிய நான்கு காலங்களில் எந்தக் காலமாவது வைத்துக் கொண்டு அப்பியாசிக்க வேண்டும்.
இருநாசித்துவாரங்களிலிருந்து வெளியே வருகின்ற சுவாசத்தின் சத்தமாகிய "ஹம்" என்பதையும் உள்ளே போகின்ற சுவாசத்தின் சத்தமாகிய "ஸம்" ( சிலர் இதனை ‍"ஸோ" என்றும் கூறுவர்) என்பதையும் கண்டறிய வேண்டும். இந்த "ஹம்ஸம்" ( "ஸோஹம்") என்கிற சத்தத்தைக் கண்டறிந்தவன், இந்த அப்பியாசத்தில் முதற்படி தெரிந்தவன் ஆவான். இந்த அப்பியாசம் செய்பவர்கள் உலக ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளவேண்டும். ஒரேயடியாக குறைக்க கூடாது.
ஏன் எனில், ஒரு வருட காலம் வரையில் மனக்கலக்கமும் பலவிதக் கவலையும் நேரிடும் என்பதால், நாளுக்கு நாள் கொஞ்ச கொஞ்சமாக நீக்க வேண்டியது. சாதகர் கூடிய அளவு மனதை ஸ்திரப்படுத்த வேண்டும்.
இதே மாதிரியாக தன்னுடைய சுவாசத்தைக் குறித்து, அதனால் உண்டாகும் "ஹம்ஸம்" என்ற சத்தத்தை கண்டறிய வேண்டும். இப்படி அப்பியாசித்து மூன்று நாடிகளின் குணத்தையும் "ஹம்ஸம்" என்ற சத்தத்தையும் கண்டறிந்தவுடன் தத்துவத்தை அறிய வேண்டியது.
மூன்று நாடிகளைக் கண்டறியாமல், பஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கக் கூடாது. இந்த யோகம், அப்பியசித்து ஜீரணசக்தியை உணர்ந்து தேகத்தைப் பலப்படுத்தவேண்டும். அதாவது அரிசி, கோதுமை, பச்சைப்பயிறு, துவரை உளுந்து, கம்பு, கேழ்வரகு, நெய், பால், தயிர், மோர் முதலியவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த யோகி அரை வயிறு அன்னமும், கால் வயிறு ஜலமும் சாப்பிட வேண்டும். ஏன் எனில், உள் வாயு மற்ற ஒரு பாகத்தில் சஞ்சரிக்க வேண்டுமென்று உணர்க.
புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு முதலியவை அதிகமாகச் சேர்க்கக்கூடாது. இத்தன்மைப்பட்ட யோகி சன்னியாசியாக வேண்டியதில்லை. எல்லாக் குடும்பத்தினரும், செல்வந்தர்களும், ஏழைகளும், ஜாதி பேத, நிற வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை. எவர்கள் திரிகரண சுத்தமாக இந்த யோகத்தைச் செய்வார்களோ அவர்களுக்கு இவை சித்திக்கும் என்பது நிச்சயம்.
ஒருவன் பதினெட்டு வயதில் இந்த அப்பியாசித்தானானால் ஐம்பதாவது வயதில் அந்தக் கேசரி முத்திரையை அடைவான். (செய்யும் பயிற்சியினைப் பொறுத்து காலங்கள் சாதகருக்கு சாதகர் வேறுபடும்) இத்தன்மையான யோகி மது, மாமிசங்களைக் கண்டிப்பாய் நீக்கியிருப்பதன்றி, ராஜஸ, தாமஸ குணங்களற்று, தத்துவத்தைக் கொண்டு சுறுசுறுப்பாக அப்பியசித்து, அதிதீவிரபக்குவமாய் வாழ்வான்.
 
தொடரும்...

12 comments:

  1. Very Nice and Rare Informations.. I am visiting to your Blog for the first time.. Really your service to Humanity thru this Blog is valuable.

    If there are somebody teaching these techniques in person, provide those informations in detail for the sadhaks to pursue the same.

    Keep up... 100 Thumps up...

    ReplyDelete
  2. அன்புள்ள சிவஞான சித்தரே ,


    தங்களின் பதிவு மிக அருமை,

    தங்களின் கருத்து மிக அருமையானது அவரவர் மனநிலையை பொறுத்து

    சித்தர்களின் பாடல்களில் விளக்கமும் கலக்கமும் கிடைக்கும்.
    எமது ஊர் அரும்பாவூர் ,பெரம்பலூர் அருகே 25 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

    சாதகனுடைய மனநிலையை பொறுத்து சித்திகள் கிடைக்கும். நம்ம நாகராஜ் சித்தர்(பாபாஜி )-48 நாளில் குருமுனியின் அருள் கிடைத்து கேசரி முத்திரையின் அனுபவம் பெற்றார்.

    சாதகன் உப்பு,புளிப்பு,காரம் சேர்த்து கொள்ள கூடாது. உண்மைதான் பெற்றோர், மனைவி,மக்கள் மூன்றும் சேர்ந்தவை தான் அவை என யாம் செவிவழி கேட்டதுண்டு.

    "தம்மையறியும் அறிவே போதும் எல்லாவற்றையும் பெறுவதற்கு"

    அகப்பேய் சித்தரின் பாடலில் ஒன்று

    தன்னை யரியவேனும் அகப்பேய்
    சாராமற் சாரவேணும்
    பின்னை யறிவதெல்லாம் அகப்பேய்
    பேயறிவு வாகுமடி ...
    http://gurumuni.blogspot.com/

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  3. @ பாலா
    தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், பதிலுக்கும் நன்றி!
    எனது ஊர் வடலூர். திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் திருவடி நிழலில் இருக்கின்றேன். பெருமானார் நிறுவிய சத்தியஞானசபை, சத்திய தருமச்சாலையில்தான் எனக்கு பணி. நீங்களும் கிட்டதான் இருக்கீங்க. கண்டிப்பா ஒரு நாள் நாம் சந்திப்போம்.

    //...சாதகனுடைய மனநிலையை பொறுத்து சித்திகள் கிடைக்கும். நம்ம நாகராஜ் சித்தர்(பாபாஜி )-48 நாளில் குருமுனியின் அருள் கிடைத்து கேசரி முத்திரையின் அனுபவம் பெற்றார்...//
    உண்மையாக இருக்கலாம். விட்டகுறை தொட்டகுறையால் சிலருக்கு சில மணி நேரங்களில் கூட அனுபவம் கிடைக்கும். இறைவன் அருள் நிச்சயம் வேண்டும்.

    அப்புறம், நாகராஜ் சித்தர் பற்றி தெரிந்து கொள்ள விழைகின்றேன். தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. அன்புள்ள சிவஞான ஐயா ,

    தங்களின் வேண்டுகோள் பாபாஜிக்கு கேட்டது என்னவோ !

    அவரைப்பற்றிய தொடர் உங்களுக்காக , நான் கீழ்காணும்

    வலைப்பூவில் பார்த்தது .

    http://gnanamethavam.blogspot.com/2011/02/1.ஹ்த்ம்ல்

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  5. @ பாலா
    நன்றி!.
    பாபாஜியைப் பற்றி மேலும் சில விஷயங்களை அறிந்து கொண்டேன்.
    தெய்வீக விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது இந்த கலியுகத்தில் சாலச் சிறந்தது.

    ReplyDelete
  6. சிவஞான சித்தருக்கு வணக்கங்கள் பல,

    நல்ல பல விசயங்களை சொல்லும் தங்களது அற்புதமான வலைத்தளத்திற்கு இன்றுதான் வரும் வாய்ப்பு கிட்டியது ...

    தங்களது தளத்தை தினமும் பார்வையிடுவதற்காக தங்கள் தளத்தில் FEED BURNER EMAIL SUBSCRIPTION ஐ சேர்த்தால் உதவியாக இருக்குமே ?


    வாய்ப்பிருக்கும்போது எமது ஆன்மிக வலைத்தளமாகிய சிவயசிவ - விற்கு வாருங்கள்

    http://sivaayasivaa.blogspot.com

    நன்றி,,

    ReplyDelete
  7. அப்புறம் இன்னும் 2 வேண்டுகோள் ...

    கமெண்ட் சொல்பவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடிய WORD VERIFICATION ஐ எடுத்து விடுங்கள்,

    மேலும், தங்களது வலைத்தளத்தின் ( background ) பின்புலத்தை கருப்பிலிருந்து GRAY OR WHITE க்கு மாற்றிவிடுங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,

    எமது சிவயசிவ வலைத்தளத்திற்கு எழுந்தருளியதோடு அதில் இணைந்தும் எமக்கு மிக்க மகிழ்ச்சியை தந்திருக்கிறீர்கள்..

    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  9. @ Anonymous said...

    //.. Y no pathivu's..//

    தங்களின் வருகைக்கு நன்றி.

    கடந்த பிப்ரவரி 2011 லிருந்து, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியினால், வடலூர் தென்மேற்கு பகுதியில் தொலைபேசி
    தொடர்பு இல்லை. பிராட்பேண்ட் தொடர்பும் இல்லை.
    இன்று வரை இணைப்பு கிடைக்கவில்லை.
    பிராட்பேண்ட் இணைப்பு இன்று வருமோ அல்லது நாளைக்கே வருமோ அல்லது
    என்றுதான் வருமோ தெரியவில்லை.
    கடந்த நான்கு மாதங்களாக அருட்சிவத்தில்
    பதிவுகளை ஏற்றமுடியவில்லை.
    பொறுமை எல்லை தாண்டியதின் விளைவு, சில தினங்களுக்கு முன்தான் நோக்கியா செல் ஒன்று இணைய இணைப்பிற்கென்றே வாங்கியுள்ளேன். விரைவில் தொடர்ந்து பதிவுகள் வெளிவரும்.

    ReplyDelete
  10. எனக்கு இறைவன் கருனை உள்ளது. ஏனென்றால் நீங்கள் எனக்கு குருவாய் வந்திருக்கிங்க..

    ReplyDelete
    Replies
    1. நடப்பது அனைத்தும் இறைவன் செயலே!.

      !! அவனருளாலே அவன் தாள் வணங்கி, நாம் செயல்படுகிறோம். !!

      Delete