Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Friday, August 27, 2010

சிவயோகசாரம் 01

இந்த அருட்சிவம் வலைப்பதிவில்  "அருட்சிவம்" "அருட்சிவம்01"  பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு நான் கற்றுணர்ந்தவைகளை உலக மக்களுக்கு எடுத்துக்கூறி எல்லவர்களையும் ஆன்மீக இன்பத்தில் திளைக்கச் செய்யும் நோக்கில் ''சிவயோகசாரம்'' எனும் நூலில் உள்ள விடயங்களை, தங்களுக்கு மேற்படி நூலில் உள்ளவாறும் சில இடங்களில் தற்காலத்தில் நடைமுறையில் உள்ள உரைநடை வாசகப்படியும், சில இடங்களில் எனது அனுபவங்களை இடைஇடையே கூறவும், எல்லாம் வல்ல அருட்சிவத்தின் துணைக்கொண்டும், சித்தர்களின் ஆசியோடும், நூலாசிரியர் பூரணாநந்தர் ஆசியோடும் முயற்சிக்கின்றேன். இந்த பதிவுகளில் / தொடரில்  எழுத்துப்பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகின்றேன். எனது இந்த முயற்சி வெற்றிபெற இதனை பார்வையிடும் வாசகர்களாகிய நீங்கள் தங்களது கருத்துரைகளை அனுப்ப வேண்டுகின்றேன். இந்நூல் (சிவயோகசாரம்) தொடர்பாக முன்னரே யாரேனும் வலைப்பதிவில் கூறியிருந்தால் அவ்வலைப்பதிவினை எனக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்.

பூராணனந்தர் அருளிச் செய்த
சிவயோகசாரம்
சிறப்புப் பாயிரம்
அவையடக்கம்'கனக வரை' என்னும் புருவத்திடை நடன ஒளி கேட்டானந்திக்கும் எந்தைமார்களே, உங்கள் பாதபங்கட்கு அனந்த வந்தனம்! அறிவிற் சிறியேன் குருமுகமாய் ஹிந்துஸ்தானியால் உணர்ந்த ராஜயோக மார்க்கத்தைப் பல நூல்களிலுள்ள அரும்பொருளொடு 'சிவயோகசாரம்' என வரைதலுற்றேன். நீரைப்பிரித்துப் பாலைக்கொள்ளும் அன்னத்தைப் போலக் குற்றம் தவிர்த்துக் குணத்தைக் கொள்ளக்கோருகின்றேன்.
அறுசீர் விருத்தம்


ஏத முற்ற பேதையேன் இயம்பு மிந்த யோகநூல்
பேத மற்ற போதமுற்றோர் பேசுவார்க ளாசையால்
வேத னைப்பட் டுழலு வாரிம் மெய்யுணராப் பொய்யரிப்
பூத லத்தி லுள்ளதீது புதுமை யன்று புலவிர்காள்.


நீர்வளம் முதலியவகைளால் சிறப்புற்றோங்கும் உத்தர தேசங்களில் பஞ்சாபு என்னும் பாஞ்சால தேசத்தில் அவதரித்தவராய், ஜீவேசுவர பேதாபேத முணர்ந்து நித்தியானுபவம் செய்யுங் பரம யோகீந்திரராய் ஸ்ரீஜனகாம்ஸ பூதரான உதாசி பாபா நானக் குரு பரம்பரையினர் அனேக வருட காலமாக அனுபவித்து வரும் இராஜயோகக் கிரமத்தை அச்சங்கத்திலொருவரும் ஞானசிரேஷ்டரும் தயாளகுண பரிபூரணருமான குரு சரண்தாஸ் பாபாஜி அவர்களால் இந்துஸ்தானி பாஷையில் உபதேசிக்கப்பெற்று, ஸ்ரீமத் நாராயண தேசிகர் நியமனத்தினால் இந்தத் தட்சிண தேசத்திலுள்ள சகல வருணாச்சிரமிகளும் உய்யும் பொருட்டுத் தமிழில் மொழி பெயர்த்து உபநிஷத்துகளிலும், யோகவாசிஷ்டம் பதஞ்சலியம், அடயோகம் முதலியவகைளிலுமுள்ள அரும்பொருளைச் சேகரித்துச் "சிவயோகசாரம்" என நற்பெயரமைத்து இதனை வெளியிடலாயிற்று.
இந்நூலைச் சாங்கோபாங்கமாக உணரும் புண்ணியர்கள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமாசித்திகளை அடைவரென்பது திண்ணம்.


அடுத்த பதிவில் குருவணக்கம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் திருவடிகளே போற்றி! பூரணானந்தர் திருவடிகளே போற்றி!


6 comments:

 1. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...கருத்துக் கேட்டிருப்பதால் சிலதை சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

  1.பின்புலம் கருப்பு நிறத்தில் இருந்தால் வாசிப்பதற்கு தடையாக இருக்கும் அல்லது கண்களை உறுத்தும்.

  2.மொச்சைக் கொட்டை சைஸில் எழுத்துக்கள் இருந்தால்தான் படிப்பார்கள் என்றில்லை. அதன் அளவினை குறைக்கலாம்.

  3.பெரிய பெரிய பாராவாக எழுதுவது வாசிப்பின் சுவாரசியத்தை குறைத்துவிடும். அதானால் நீங்கள் சொல்ல வருவது வாசிப்பவருக்கு போய்ச் சேருவதில் தடையாகும்.

  4.எழுதிய பின்னர் ஒன்றிற்கு இரண்டு முறை வாசித்த பின்னர் பதிவேற்றுங்கள். ஏனெனில் இந்த பதிவில் இருக்கும் அர்த்தபிழையை கவனியுங்கள். உதாரணம் (இந்த நூலில் எழுத்துப்பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகின்றேன்.) இது இப்படி இருக்க வேண்டும் ”இந்த பதிவுகளில்/தொடரில் எழுத்துப்பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகின்றேன்”.

  ReplyDelete
 2. 5.உங்களிடம் இருக்கும் ஒரு நூலினை ஈயடிச்சான் காப்பியாக டைப் செய்து போடுவதில் எந்த பலனும் இல்லை. அதற்கு ஒரு நல்ல தட்டச்சரே போதுமானது. நீங்கள் உங்களைப் பற்றிக் கொடுத்திருக்கும் இத்தனை பெரிய பில்டப்புகளினால்....இந்த நூலினை நீங்கள் உள்வாங்கியதன் புரிதலை சமகால எழுத்து நடையில் பதிய முயற்சியுங்கள்.

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. @ டுபாக்கூர் பதிவர்.

  தங்களது கருத்துரைக்கும், சுட்டிக்காட்டுதலுக்கும் மிக்க நன்றி!

  For para 1 : பின்புலம் கருப்பு நிறத்தில் உள்ளதென்பது Blog டெம்ப்ளேட்டின் கைவரிசை.
  முடிந்தால் மாற்றி விடுகின்றேன்.எம்.எஸ்.ஆபிஸ் வேர்டில் White text with Blue Background என்ற ஆப்ஷன் கண்கள் கூசாமல் இருப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றிவிடலாம் என்று எண்ணுகின்றேன். மாற்றிய பிறகு கருத்துரை அனுப்பவும்.
  For para 2 : முதல் பதிவு பெரிய எழுத்தில் உள்ளது என்பது உண்மை. மற்றவை மீடியம் சைசில்தான் உள்ளது. முதல் பதிவு எழுத்தின் அளவை மாற்றி விடுகின்றேன்.
  For para 3 : முடிந்த அளவிற்கு பாராவின் நீளத்தை சுருக்குகின்றேன்.
  For para 4 : தாங்கள் கூறியவாறு மாற்றிவிட்டேன்.

  For para 5 : ( இப்பதில் தங்களுக்கு மட்டும்) கூடுமானவரை பழைய தமிழ்நடையினை சிதைக்கக்கூடாது என்பது என் எண்ணம். தற்காலத்தில் பல நூல்கள் அவ்வாறு தமிழ் நடை சிதைந்துபோய் காணப்படுகின்றது. கூடுமானவரை மேற்படி சிவயோகசாரம் நூலில் உள்ளதை அப்படியே பதிவேற்றிவிட்டு, தேவையான இடத்தில் எனது விளக்கத்தினையும், மேற்படி சிவயோகசாரம் குறித்தான எனது அனுபவங்களையும் குறிப்பிடலாம் என்பது எனது விருப்பம். (இக்கருத்தை சிவயோகசாரம்01 பதிவு முதல் பத்தியில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்).
  பில்டப் என்று எதை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு குடத்திலுள்ள நீரை (எனது அனுபவங்களை) ஊசிமுனையளவு உள்ள துவார (இணைய)த்தின் வழியாக இறக்க முயற்சிக்கின்றேன். முடிவு எப்படியோ?.
  தவறுகளை திருத்திக்கொள்பவன்தான் நல்லமனிதன். நான் நல்ல மனிதாக இருக்க முயன்றுவருகின்றேன்.
  தங்களது தனிப்பட்ட கருத்துக்களை எனது saimeenan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நாம் நண்பர்களாக தொடர்வோம்.

  ReplyDelete
 4. http://karudapuranamtamil.blogspot.com/ இதை படி சித்தரே..

  ReplyDelete
 5. புது இடுகைகள் போடுங்கள். ஒவ்வொரு இடுகைக்கும் நெறைய நாட்களை எடுத்து கொள்கறீர்கள்

  ReplyDelete
 6. இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  ReplyDelete